Advertisement


ஸ்ரேயா–திவ்யான்ஸ் ஜோடி வெண்கலம்

செப்டம்பர் 05, 2018.
 Comments  
 


Divyansh Singh Panwar, Shreya Agarwal, ISSF World Shooting Championships
 

சங்வான்: உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் ‘ஜூனியர்’ 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஸ்ரேயா– திவ்யான்ஸ் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

தென் கொரியாவின் சங்வான் நகரில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ‘ஜூனியர்’ 10 மீ., ‘ஏர் ரைபிள்’ கலப்பு இரட்டையர் பிரிவு நடந்தது. இந்தியா சார்பில் ஸ்ரேயா அகர்வால்– திவ்யான்ஸ் சிங் ஜோடி மற்றும் இளவேனில்–ஹரிடே ஜோடி பங்கேற்றது. தகுதிச்சுற்றில் 5வது இடம் பிடித்த ஸ்ரேயா ஜோடி (834.4 புள்ளி) பைனலுக்கு முன்னேறியது. இளவேனில் ஜோடி (829.5) 13வது இடம் பிடித்து வெளியேறியது. 

பைனலில் ஸ்ரேயா– திவ்யான்ஸ் சிங் ஜோடி 435 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்துடன் வெண்கலம் கைப்பற்றியது. தங்கம், வெள்ளி முறையே இத்தாலியின் சோபியா– மார்கோ ஜோடி, ஈரானின் ஆர்மினா– முகமது ஆமிர் ஜோடி வென்றது. இதுவரை ‘ஜூனியர்’ பிரிவில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கத்துடன் இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

சஞ்சீவ் ஏமாற்றம்

ஆண்களுக்கான 50 மீ., ‘ரைபிள் புரோன்’ அணிகளுக்கான பிரிவில் செயின் சிங், சஞ்சீவ் ராஜ்புட், ககன் நரங் அடங்கிய இந்திய அணி 1856.1 புள்ளிகள் பெற்று 15வது இடம் பிடித்தது. தனிநபர்களுக்கான இதே பிரிவில் செயின் சிங் (623.9 புள்ளி), சஞ்சீவ் ராஜ்புட் (620) முறையே 14, 48வது இடம் பிடித்து ஏமாற்றினர்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?