Advertisement


ஆசிய தடகளம்: தடம் பதிப்பாரா தருண்

செப்டம்பர் 05, 2018.
 Comments  
 


Dharun Ayyasamy, 400m hurdler, Asian Games 2018, Silver Medal
 

புதுடில்லி: ‘‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய தடகளத்தில் பதக்கம் வெல்வதே இலக்கு,’’ என, இந்திய வீரர் தருண் அய்யாச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்திய தடகள வீரர் தருண் அய்யாச்சாமி, 21. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த இவர், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் மற்றும் 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளி வென்றார். தற்போது இவரது கவனம், அடுத்த ஆண்டு கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் மீது திரும்பி உள்ளது.

இதுகுறித்து தருண் அய்யாச்சாமி கூறியது: ஆசிய விளையாட்டில் இரண்டு வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி. இனி, அடுத்த ஆண்டு தோகாவில் நடக்கவுள்ள ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு. என்ன பதக்கம் வெல்வேன் என்பதை கூற முடியாது. ஆனால் பதக்கத்துடன் தான் நாடு திரும்புவேன். இதேபோல அடுத்த ஆண்டு தோகாவில் நடக்க உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல விரும்புகிறேன்.

அடுத்த ஆண்டு 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பந்தைய துாரத்தை 48.80 வினாடியில் கடக்க முயற்சி செய்வேன். அப்போது தான் 2020ல் நடக்கவுள்ள ஒலிம்பிக்கில் பந்தய துாரத்தை 48.2 அல்லது 48.1 வினாடியில் கடந்து பைனலுக்கு தகுதி பெற முடியும். பொதுவாக ஓட்டப்பந்தயத்தில் பைனலுக்கு முன்னேறுவது மிகப் பெரிய விஷயம். எனவே எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் முதலில் பைனலுக்கு தகுதிபெறுவதில் கவனம் செலுத்துவேன்.

ஐரோப்பிய நாடுகளில் பயிற்சி மேற்கொள்வது வசதியாக உள்ளது. அங்கு நடக்கும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதன்மூலம் நிறைய அனுபவத்தை பெற முடியும். இது, மிகப் பெரிய போட்டிகளில் சாதிக்க ஊக்கமாக அமையும். செக்குடியரசில் பயிற்சி மேற்கொண்டதன்மூலம், கடந்த மார்ச் மாதம் நடந்த பெடரேஷன் கோப்பையில் சிறப்பாக செயல்பட முடிந்தது. இது, ஆசிய கோப்பையில் சாதிக்க உதவியது.

எனது தந்தை மறைவுக்கு பின், தாயார் தந்த ஆதரவால் தான் இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது.

இவ்வாறு தருண் அய்யாச்சாமி கூறினார்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?