Advertisement


பாக்., வீரருடன் அனுபவம்: என்ன சொல்கிறார் நீரஜ் சோப்ரா

செப்டம்பர் 05, 2018.
 Comments  
 


Neeraj Chopra, javelin thrower, india, asian games 2018, gold medal
 

புதுடில்லி: ‘‘ஆசிய விளையாட்டில் பாகிஸ்தான், சீன வீரர்களுடன் பரிசளிப்பு மேடையை பகிர்ந்து கொண்டதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது கவனம் முழுவதும் தேசியகீதம் இசைத்ததில் மட்டுமே இருந்தது’’ என, இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 20. சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். இதன் மூலம், ஆசிய விளையாட்டில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் என்ற பெருமை பெற்றார். வெள்ளி, வெண்கலம் முறையே சீனாவின் லியு, பாகிஸ்தானின் அர்சத் நதீம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில், நதீமுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த நீரஜ் ‘வீடியோ’ சமூகவலைதளத்தில் பலரது பாராட்டை பெற்றது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா, குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். விளையாட்டு மட்டுமே சமநிலை, மனித நேயத்தை வளர்க்கும், என நீரஜ் சோப்ராவின் ‘வீடியோ’வை உதாரணமாக காட்டி இருந்தார்.

அன்பு செலுத்தும்

இது குறித்து நீரஜ் சோப்ரா கூறியது: ஆசிய விளையாட்டிற்கான பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் வீரருடன் நட்பு பாராட்டிய தருணத்தை பெரியளவில் நினைக்கவில்லை. என் கவனம் முழுவதும், மூவர்ணக்கொடியை ஏற்றி தேசிய கீதம் இசைத்ததில் மட்டுமே இருந்தது. அப்போது, சற்று உணர்ச்சிவசப்பட்டேன். இந்த உயரம் எட்டுவதற்கு எந்த அளவுக்கு கடினமாக உழைத்திருப்பேன் என நினைத்தேன். விளையாட்டு எப்போதுமே சக போட்டியாளர்கள் மீது அன்பு செலுத்தவே கற்றுக்கொடுக்கும்.

பேச மறுக்கவில்லை: எனது ‘வாட்ஸ் ஆப்’பில் தொடர்பு கொள்ள முடியவில்லை என நதீம் கூறி இருக்கிறார். யார் யார் என்னை தொடர்பு கொள்ளவோ அல்லது பேசவோ நினைக்கிறார்கள் என தெரியவில்லை. ஒருவேளை, நதீம் ‘வாட்ஸ் ஆப்’பில் ‘மெசேஜ்’ அனுப்பி இருக்கலாம். நான் இன்னும் பல ‘மெசேஜை’ பார்க்காமல்தான் இருக்கிறேன்.

ஆஸ்திரேலியாவின் கோல்கோஸ்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றபோதும், அப்போதைய தேசிய சாதனையை முறியடித்தேன். ஆசிய விளையாட்டை பொறுத்தவரை 88.06 மீ., துாரம் எறிந்தது மகிழ்ச்சி தந்தது. டயமன்ட் லீக் போட்டியில், கடைசி கட்டத்தில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தேன். இருப்பினும், அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வெல்வேன் என நம்புகிறேன். இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?