Advertisement


அரையிறுதியில் நடால்: யு.எஸ்., ஓபனில் ‘திரில்’ வெற்றி

செப்டம்பர் 05, 2018.
 Comments [1]  
 


us open tennis, nadal semi final, serena williams
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு நடால் ஏழாவது முறையாக முன்னேறினார்.

அமெரிக்காவில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீரர், ஸ்பெயினின் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 0–6 என இழந்த நடால் மீண்டு வருவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அடுத்த இரு செட்களையும் நடால் 6–4, 7–5 என கைப்பற்றினார். நான்காவது செட்டில் எழுச்சி பெற்ற தியம், ‘டை பிரேக்கர்’ வரை சென்று 7–6 என தன்வசப்படுத்தினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி செட்டில் இருவரும் மாறி மாறி கேம்களை கைப்பற்றினர்.

இதனால் 6–6 என்ற நிலையை அடைந்தது. பின் நடந்த ‘டை பிரேக்கரில்’ நடால் 7–6 என வென்றார். 4 மணி நேரம், 49 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் நடால் 0–6, 6–4, 7–6, 6–7, 7–6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் அர்ஜென்டினாவின் டெல் போட்ரோ, அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்தித்தார். இதில் டெல் போட்ரோ 6–7, 6–3, 7–6, 6–2 என வெற்றி பெற்றார். அரையிறுதியில் நடால், டெல் போட்ரோ மோதுகின்றனர்.

செரினா அபாரம்: பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவை சந்தித்தார். இதன் முதல் செட்டில் 6–4 என வென்ற செரினா, அடுத்த செட்டையும் 6–3 என கைப்பற்றினார். முடிவில் 6–4, 6–3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற செரினா அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் லாட்வியாவின் செவஸ்டோவா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை 6–2, 6–3 என எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

29வது முறை

யு.எஸ்., ஓபன் காலிறுதியில் வெற்றி பெற்ற நடால், கிராண்ட்ஸ்லாம் தொடரில் அதிகமுறை (29) அரையிறுதிக்கு முன்னேறிய வீரர்களில், இவான் லெண்டிலை (28, அமெரிக்கா) முந்தி, நான்காவது இடம் பிடித்தார். முதல் மூன்று இடத்தில் பெடரர் (43, சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (32, செர்பியா), ஜிம்மி கானர்ஸ் (31, அமெரிக்கா) உள்ளனர்.

போபண்ணா ஏமாற்றம்

ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா, ரோஜர் வாசலின் (பிரான்ஸ்) ஜோடி, கொலம்பியாவின் கபால், பரா ஜோடியிடம் 2–6, 3–6 என எளிதாக வீழ்ந்தது.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
S.Baliah Seer 2 weeks ago | Report abuse
Nadal is able to win all the top Tennis Player including Federar .But his play with Jacovich ends in favor of the later .It is a big tragedy .I think Nadal is suffering from Jacovich phobia .Unless Nadal removes this phobia from his mind It is impossible for him to defeat Jacovich .For sometime Jacovich goes to bottom ,but suddenly he comes up and lift the champion cup ,especially grand slam .I don 't understand this phenomena .What happened to young new players ? Is tennis world short of them ?




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?