Advertisement


ஆசிய ஹாக்கி: தேறாத இந்திய அணி

ஆகஸ்ட் 30, 2018.
 Comments  
 


india hockey team, asian games
 

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, 6–7 என, ‘சடன்டெத்’ முறையில் மலேசியாவிடம் வீழ்ந்தது. இதன்மூலம் வரும் 2020ல் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

இந்தோனேஷியாவில், ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி, லீக் சுற்றில் இந்தோனேஷியா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, இலங்கை அணிகளை வீழ்த்தி 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளை வீணடிக்க முதல் 30 நிமிட முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி சமநிலை வகித்திருந்தது. பின், 33வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 6வது ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோலடித்தார். இதற்கு 39வது நிமிடத்தில் மலேசியாவின் பைசால் சாரி, ஒரு ‘பீல்டு’ கோலடித்து பதிலடி தந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட இந்தியாவுக்கு 40வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் வருண் குமார் ஒரு கோலடித்து 2–1 என முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து போராடிய மலேசிய அணியினரின் கோலடிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. இந்நிலையில் 58வது நிமிடத்தில் மலேசியாவுக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் முகமது ரஜீ ரஹிம் கோலடிக்க, ஆட்டநேர முடிவில் போட்டி 2–2 என சமநிலை வகித்தது.

அதிர்ச்சி தோல்வி

பின், போட்டியின் முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் இரு அணியினருக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங் மட்டும் கோலடிக்க, மீண்டும் 2–2 என சமநிலை வகித்தது. இதனையடுத்து ‘சடன்டெத்’ முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஹர்மன்பிரீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்பிரீத் சிங், தில்பிரீத் சிங் தங்களது வாய்ப்புகளை கோலாக்கினர். சுனில் தனது வாய்ப்பை வீணடிக்க இந்தியாவின் வெற்றி பறிபோனது. முடிவில் இந்திய அணி 6–7 என ‘சடன்டெத்’ முறையில் தோல்வியடைந்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இனி, நாளை நடக்கவுள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அல்லது ஜப்பான் அணியை சந்திக்கும்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?