Advertisement


தங்கம் வென்றார் ஜின்சன் ஜான்சன்

ஆகஸ்ட் 30, 2018.
 Comments [1]  
 


Asian Games 2018, Jinson Johnson, 1500 meters Running, Gold
 

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சித்ரா வெண்கலம் வென்றார். வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை சீமா புனியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.

இந்தோனேஷியாவில், 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியா சார்பில் ஜின்சன் ஜான்சன், மன்ஜித் சிங் பங்கேற்றனர். பந்தய துாரத்தை 3 நிமிடம், 44.72 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த ஜின்சன் ஜான்சன், தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, ஆசிய விளையாட்டில் இவரது 2வது பதக்கம். ஏற்கனவே இம்முறை 800 மீ., ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி இருந்தார்.

மற்றொரு இந்திய வீரர் மன்ஜித் சிங், பந்தய துாரத்தை 3 நிமிடம், 46.57 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே ஈரானின் அமிர் மொராடி (3 நிமிடம், 45.62 வினாடி), பக்ரைனின் முகமது (3 நிமிடம், 45.88 வினாடி) கைப்பற்றினர்.

சித்ரா வெண்கலம்: பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் சித்ரா பங்கேற்றார். இவர், பந்தய துாரத்தை 4 நிமிடம், 12.56 வினாடியில் கடந்து 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். முதலிரண்டு இடங்களை முறையே பக்ரைனின் கால்கிடான் பெப்கடு (4 நிமிடம், 07.88 வினாடி), டைஜிஸ்ட் பெலே (4 நிமிடம், 09.12 வினாடி) பிடித்தனர்.

சீமா வெண்கலம்: வட்டு எறிதலில் இந்தியா சார்பில் சீமா புனியா, சந்தீப் குமாரி பங்கேற்றனர். கடந்த 2014ல் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சீமா புனியா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 62.26 மீ., துாரம் எறிந்த இவர், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சந்தீப் குமாரி, அதிகபட்சமாக 54.61 மீ., துாரம் எறிந்து 5வது இடம் பிடித்து ஏமாற்றினார். முதலிரண்டு இடங்களை சீனாவின் யாங் சென் (65.12 மீ.,), பின் பெங் (64.25 மீ.,) கைப்பற்றினர்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 3 weeks ago | Report abuse
indhiya inum pala dhangam vellanum




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?