Advertisement


புயலாக சீறிய பும்ரா: இந்திய ‘வேகங்கள்’ கலக்கல்

ஆகஸ்ட் 30, 2018.
 Comments  
 


bumrah, india, test, england
 
சவுத்தாம்ப்டன்: நான்காவது டெஸ்ட், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ‘வேகத்தில்’புயலாக சீறிய பும்ரா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. மூன்றாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற போதும் தொடரில் 1–2 என பின் தங்கியுள்ளது.

இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் நேற்று சவுத்தாம்ப்டன் மைதானத்தில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

பும்ரா நம்பிக்கை

இங்கிலாந்து அணிக்கு அலெஸ்டர் குக், ஜென்னிங்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆடுகளத்தில் இருந்த புற்கள் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக அமைய இந்திய ‘வேகங்கள்’ போட்டுத் தாக்கினர். தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்சை ‘டக்’ அவுட்டாக்கினார் பும்ரா. அடுத்து வந்த ஜோ ரூட்டை 4 ரன்னுக்கு வெளியேற்றினார்.மீண்டும் மிரட்டிய பும்ரா, பின் வந்த பேர்ஸ்டோவை (6) விரைவில் பெவிலியன் அனுப்பி வைத்தார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த குக், 17 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட்யா பந்தில் அவுட்டாக இங்கிலாந்து அணி 36 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

கர்ரான் அரைசதம்

பட்லர்(24),ஸ்டோக்ஸ்(23) அணியை கைவிட இங்கிலாந்து86/6 என தள்ளாடியது.பின் இந்திய பவுலர்கள் ஏமாற்ற சரிவில் இருந்து மீண்டது இங்கிலாந்து. மொயீன் அலி (40), ரஷித் (6) அவுட்டான போதும் கர்ரான் அரைசதம் அடித்தார். இவர் 78 ரன்னில் அஷ்வினிடம் போல்டாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இந்தியா சார்பில் பும்ரா 3, முகமது ஷமி, இஷாந்த், அஷ்வின் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. தவான் (3), ராகுல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

38

கோஹ்லி கேப்டனாக களமிறங்கிய 38 டெஸ்டிலும், லெவன் அணியில் ஏதாவது ஒரு மாற்றம் இருந்தது. முதன் முறையாக அடுத்தடுத்த டெஸ்டில் (நாட்டிங்காம், சவுத்தாம்ப்டன்) மாறாத ‘லெவன்’ அணியுடன் இந்தியா களமிறங்கியது.

200

இங்கிலாந்தின் பட்லரை ‘பிடித்து’ அனுப்பிய கோஹ்லி சர்வதேச டெஸ்ட் அரங்கில் 200வது ‘கேட்ச்’ செய்து அசத்தினார். இந்த இலக்கை எட்டிய நான்காவது இந்திய வீரர் ஆனார். முதல் மூன்று இடங்களில் டிராவிட் (334), அசார் (261), சச்சின் (256) உள்ளனர்.

250

ஜோ ரூட்டை அவுட்டாக்கிய இஷாந்த் சர்மா, டெஸ்ட் அரங்கில் 250 விக்கெட் வீழ்த்தினார். இந்த இலக்கை எட்டிய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர், ஏழாவது இந்திய பவுலர் ஆனார். தவிர இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் கைப்பற்றிய 50 டெஸ்ட் விக்கெட்டாகவும் இது அமைந்தது.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?