Advertisement


அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி

ஆகஸ்ட் 28, 2018.
 Comments  
 


india hockey team, asian games
 

ஜகார்த்தா: ஆசிய ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு 100 சதவீத வெற்றியுடன் முன்னேறியது இந்திய ஆண்கள் அணி. இதில் நாளை மலேசியாவை சந்திக்கிறது.

லீக் சுற்றில் இந்திய ஆண்கள் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தோனேஷியா (17–0), ஹாங்காங் (26–0), ஜப்பான் (8–0), தென் கொரியா (5–3) அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று தனது கடைசி லீக் போட்டியில் இலங்கையை சந்தித்தது.

முதல் பாதியில் 7–0 என முன்னிலை பெற்றது இந்திய அணி. தொடர்ந்து இரண்டாவது பாதியில் (30 நிமிடம்) மிரட்டிய இந்திய அணி 13 கோல்கள் அடித்தது. முடிவில் 20–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆசிய விளையாட்டில் இந்தியா பெற்ற இரண்டாவது மிகப்பெரிய வெற்றி இது. நாளை நடக்கும் முதல் அரையிறுதியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது.

7 கோல்

இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் சிங் 7 கோல்கள் (10, 11, 18, 23, 33, 43 வது நிமிடம்) அடித்து மிரட்டினார். ருபிந்தர் பால் சிங் (2வது, 52, 53), ஹர்மன்பிரீத் சிங் (6, 22, 33 ), மன்தீப் சிங் (36, 44, 59) என மூன்று வீரர்கள் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தனர். லலித் குமார் (58, 59) இரண்டு கோல் அடிக்க, விவேக் (32), அமித் ரோகிதாஸ் (38), தில்பிரீத் (53) தலா ஒரு கோல் அடித்தனர்.

73

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடரில் இந்திய ஆண்கள் அணி, லீக் சுற்றில் மொத்தம் 73 கோல்கள் அடித்தது.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?