Advertisement


ஜெயித்து காட்டிய மன்ஜித்: புயலாக பாய்ந்து தங்கம் வென்றார்

ஆகஸ்ட் 28, 2018.
 Comments [2]  
 


manjit singh, india, gold
 

ஜகார்த்தா: ஆசிய தடகளத்தில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் கிடைத்தது. நேற்று நடந்த 800 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் மன்ஜித் சிங் தங்கம் கைப்பற்றினார். ஜின்சன் ஜான்சன் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் 10 வது நாள் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் மன்ஜித் சிங், ஜின்சன் ஜா6ன்சன் பங்கேற்றனர்.

இதில் புயலாக பாய்ந்த மன்ஜித் சிங், 1 நிமிடம், 46.15 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இவருக்கு கடும் சவால் கொடுத்த ஜின்சன் ஜான்சன், 1 நிமிடம், 46.35 வினாடி நேரத்தில் வந்து வெ ள்ளிபதக்கம் கைப்பற்றினார்.

மூன்றாவது தங்கம்

தடகளத்தில் தஜிந்தர்பால் சிங் (குண்டு எறிதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) தங்கம் வென்ற நிலையில் இது இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது தங்கமாக அமைந்தது. தவிர 8 வெள்ளி உட்பட இதுவரை தடகளத்தில் இந்தியா 11 பதக்கம் கைப்பற்றியது.

முதன் முறை

ஹரியானாவின் உஜ்ஹனா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மன்ஜித் சிங், 28. கடந்த 2013 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் நான்காவது இடம் பிடித்தவர். முதன் முறையாக பங்கேற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று சாதித்தார்.

3

ஆசிய தடகளத்தில் 800 மீ., போட்டியில் இரு இந்திய வீரர்கள் பதக்கம் வென்றது மூன்றாவது முறையாக நேற்று நடந்தது. இதற்கு முன் 1951ல் ரஞ்சித் சிங் (தங்கம்), குல்வந்த் சிங் (வெள்ளி) மற்றும் 1962ல் தல்ஜித் சிங் (வெள்ளி), அம்ரித் பால் (வெண்கலம்) பதக்கம் வென்றனர்.

5

ஆசிய விளையாட்டு 800 மீ., ஓட்டத்தில் இந்தியா 6வது முறையாக தங்கம் வென்றது. தவிர தங்கம் வென்ற 5வது இந்திய வீரர் ஆனார் மன்ஜித் சிங். இதற்கு முன் ரஞ்சித் சிங் (1951), போகேஷ்வர் (1966), ஸ்ரீராம் (1974, 1978), சார்லஸ் (1982) தங்கம் வென்றுள்ளனர்.

பைனலில் டுட்டீ சந்த்

தடகளம் 200 மீ., ஓட்டம் நேற்று நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் களமிறங்கிய டுட்டீ சந்த் (23.37 வினாடி) அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 23.00 வினாடி நேரத்தில் வந்து இன்று மாலை நடக்கும் பைனலுக்கு (5:20 மணி) தகுதி பெற்றார் டுட்டீ சந்த்.

50

ஆசிய தடகளத்தில் கலப்பு 4*400 மீ., தொடர் ஓட்டம் நேற்று நடந்தது. இந்தியா சார்பில் முதலில் முகமது அனாஸ் துவக்கினார். அடுத்து பூவம்மா, ஹிமா தாஸ் ஓடினர். கடைசியாக தமிழகத்தின் திருச்சி வீரர் ஆரோக்கிய ராஜிவ் சற்று வேகம் எடுக்க இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் (3 நிமிடம், 15.71 வினாடி) கிடைத்தது. இது இந்த ஆசிய விளையாட்டில் இந்தியா வென்ற 50வது பதக்கமாக அமைந்தது.

நிறம் மாறுமா

மூன்றாவதாக ஓடி வந்த ஹிமா தாஸ், ‘பேடனை’ ஆரோக்கிய ராஜிவிடம் தந்த பிறகு தரையில் அமர்ந்தார். ஆனால் முன்னாள் சென்ற பஹ்ரைனின் ஆப்ரிக்க வீரர் அபாஸ், ஹிமாவை இடித்துச் சென்றதாக புகார் கூறப்பட்டது. இதை ஆசிய கூட்டமைப்பு விசாரிக்கிறது. தவறு நடந்தது உறுதி எனில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்கலாம்.

குராஷ் வரலாறு

மல்யுத்த போட்டியைப் போன்றது குராஷ், மத்திய ஆசியாவில் உள்ள தற்காப்பு கலை. இதில் இந்திய வீராங்கனை பின்க்கி, 19, பைனலில் 0–10 என குல்னாரிடம் (உஸ்பெகிஸ்தான்) தோற்று வெள்ளி வென்றார்.

* அரையிறுதியில் தோற்ற மற்றொரு இந்திய வீராங்கனை மலபிரபா, வெண்கலம் கைப்பற்றினார்.

தப்பாக துவக்கிய ஹிமா

பெண்கள் 200 மீ., ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் 23.47 வினாடி நேரத்தில் வந்து அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் ஹிமா தாஸ். அடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதியில் ‘ஸ்டார்ட்’ துப்பாக்கி சத்தம் ஒலிப்பதற்கு முன் ஹிமா தாஸ் மட்டும் தவறுதலாக முன்னதாக ஓடத் துவங்கினார். இதையடுத்து இவருக்கு ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

சுவப்னா பர்மன் நம்பிக்கை

பெண்களுக்கான ‘ஹெப்டத்லான்’ போட்டிகள் நடக்கிறது. 100, 200, 800 மீ., மற்றும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என ஏழு பிரிவுகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறுபவர் பதக்கம் பெறுவர்.

நேற்று நடந்த நான்கு போட்டிகள் முடிவில் இந்தியாவின் சுவப்னா பர்மன் (3481 புள்ளி), பூர்ணிமா (3424) 2, 3வது இடத்தில் உள்ளனர்.

அன்னு ‘ஆறு’

பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற அன்னு ராணி, 53.93 மீ., துாரம் எறிந்து ஆறாவது இடம் பிடித்தார்.

5000 மீ.,

தடகளத்தில் நேற்று நடந்த பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சூர்யா லோகனாதன் (15 நிமிடம், 49.30 வினாடி), சஞ்சீவனி (15:52.96) 5, 7வது இடம் பிடித்து ஏமாற்றினர்.

வாலிபால்: இந்தியா ஏமாற்றம்

ஆசிய வாலிபால் ஆண்கள் பிரிவில் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா, 7 முதல் 12 வரையிலான இடங்களைப் பெற விளையாடுகிறது. இதில் நேற்று பாகிஸ்தானை சந்தித்தது. முதல் செட்டை 25–21 என வென்ற இந்தியா அடுத்த மூன்று செட்களையும் 21–25, 21–25, 23–25 என தோற்றது.

ஸ்குவாஷ்: மூன்றாவது வெற்றி

ஆசிய ஸ்குவாஷ் ஆண்கள் அணிகளுக்கான போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் உள்ளது. முதல் இரு போட்டிகளில் சிங்கப்பூர் (3–0), இந்தோனேஷியாவை (3–0) வென்றது. மூன்றாவது போட்டியில் கத்தாரை 2–1 என வீழ்த்தியது.

* ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, முதல் இரு போட்டிகளில் ஈரான் (3–0), தாய்லாந்தை (3–0) சாய்த்தது. மூன்றாவது போட்டியில் இந்தோனேஷியாவை 3–0 என வென்றது.

பவித்ரா தோல்வி

ஆசிய பெண்கள் குத்துச்சண்டை ‘லைட் வெயிட்’ (60 கி.கி.,) காலிறுதியில் இந்திய வீராங்கனை பவித்ரா, இந்தோனேஷியாவின் ஹசானாவிடம் 2–3 என போராடி வீழ்ந்தார்.

* ‘பெதர் வெயிட்’ (57 கி.கி.,) பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சோனியா, 0–5 என வட கொரியாவின் ஜோ சன்னிடம் தோற்றார்.

 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
R. Venkateswaran 3 weeks ago | Report abuse
மஞ்சித் என்றால் நம் மனதை வெல்லுபவர் என்று ஹிந்தியில் பொருள். உண்மையாகவே நம் அனைவரது மனதையும் வென்று தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளார் திரு மஞ்சித். வாழ்க வளர்க


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 3 weeks ago | Report abuse
manjith manasellam nerindhuvittadhu




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?