Advertisement


வில்வித்தையில் இரண்டு வெள்ளி

ஆகஸ்ட் 28, 2018.
 Comments  
 


india archery team, silver
 

ஜகார்த்தா: ஆசிய வில்வித்தை அணிகளுக்கான போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 

ஆசிய வில்வித்தை காம்பவுண்டு பெண்களுக்கான பைனலில் மதுமிதா, முஸ்கான், ஜோதி சுரேகா அடங்கிய இந்திய அணி, தென் கொரியாவை சந்தித்தது. முதல் செட்டில் (59–57) முன்னிலை பெற்ற இந்திய அணி, மூன்று செட் முடிவில் 173–173 என சமநிலை அடைந்தது.

கடைசி மற்றும் நான்காவது செட்டில் (55–58) ஏமாற்ற 228–231 என்ற கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது. 

ஆண்கள் அதிர்ச்சி

ஆண்கள் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், அமன் சைனி அடங்கிய அணி, தென் கொரியாவை சந்தித்தது. துவக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்தது இந்திய அணி (60–56, 54–58, 58–56). மூன்று செட் முடிவில் 172–170 என முன்னிலை பெற்றது. கடைசி செட்டில் 57–58 என பெற, 229–228 என இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் கடைசி செட்டில் வழங்கப்பட்ட புள்ளிகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டு போட்டி 229–229 என சமன் ஆனதாக அறிவிக்கப்பட்டது. பிறகு நடந்த ‘பெனால்டி ஷூட் அவுட்டும்’ 29–29 என சமன் ஆனது. வில்வித்தை படி ‘பெனால்டி ஷூட் அவுட்’ சமநிலை அடையும் போது, இந்த வாய்ப்பில் மைய வட்டத்தில் யார் அதிகமுறை அம்பு எய்தது என கணக்கில் கொள்ளப்படும். இதில் ஒருமுறை சரியாக எய்திருந்த தென் கொரியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?