Advertisement


மாறாத ‘வெள்ளி’ சிந்து

ஆகஸ்ட் 28, 2018.
 Comments [1]  
 


 PV Sindhu won the silver after losing the badminton womens single
 

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்கள் பாட்மின்டனில் ஒற்றையர் பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் இளம் வீராங்கனை, ‘நம்பர்–3’ இடத்திலுள்ள சிந்து, உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை சீன தைபேவின் தய் ஜு இங்கை எதிர்கொண்டார்.

இதற்கு முன் இருவரும் விளையாடிய 12 போட்டிகளில் 3 ல் தான் சிந்து வெற்றி பெற்றிருந்தார். கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் சிந்து தோற்றிருந்தார். இதனால் தானோ என்னவோ, மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் முதல் செட்டை 13–21 என தோற்றார். தொடர்ந்து அடுத்த செட்டிலும் ஏமாற்றிய சிந்து 16–21 என நழுவவிட, ஆசிய விளையாட்டில் கைப்பற்ற வேண்டிய முதல் தங்கமும் கை நழுவியது. முடிவில் சிந்து 13–21, 16–21 என நேர் செட்களில் வீழ்ந்தார். இருப்பினும் ஆசிய விளையாட்டு பாட்மின்டன் அரங்கில் தனிநபர் பிரிவில் முதன் முதலாக வெள்ளி வென்ற இந்திய நட்சத்திரம் ஆனார்.

9

கடந்த 2016ல் ஹாங்காங் ஓபன் பைனலில் தோற்றார். அடுத்து ரியோ ஒலிம்பிக் (2016) பைனலில் வீழ்ந்தார். பின், உலக சாம்பியன்ஷிப் (2017, 2018), காமன்வெல்த், தற்போது ஆசிய விளையாட்டு என இவர் விளையாடிய 14 பைனல்களில் 9வது முறையாக தோற்றுள்ளார்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
chezhian 3 weeks ago | Report abuse
இவர்கள் எது வாங்கினாலும் நமக்கு இவர்கள் தான் இந்தியாவின் தங்க மங்கைகள்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?