Advertisement


தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா: ஈட்டி எறிதலில் புதிய சாதனை

ஆகஸ்ட் 27, 2018.
 Comments [1]  
 


Neeraj breaks national record again, gold india asian games
 

ஜகார்த்தா: ஆசிய ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் இளம் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் 88.06 மீ., துாரம் எறிய, ஆசிய ஈட்டி எறிதலில் முதன் முறையாக இந்தியா பதக்கம் வென்று வரலாறு படைத்தது. 

இந்தோனேஷியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் துவக்க வாய்ப்பில் 83.46 மீ., துாரம் எறிந்த 20 வயது ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா, முதலிடம் பிடித்தார். தொடர்ந்து முதலிடத்தில் நீடித்த இவர், நான்காவது வாய்ப்பில் 88.07 மீ., துாரம் எறிந்தார். இது இவரது புதிய தேசிய சாதனை. இதற்கு முன் சமீபத்திய கத்தார் போட்டியில் 87.43 மீ., துாரம் எறிந்ததே அதிகம். 

தங்கம் வேண்டும்: ஹரியானாவில் ஈட்டி எறிதல் வீரர்களைப் பார்த்து ஆர்வம் கொண்ட நீரஜ் சோப்ரா, 13 வயதில் (2011) இப்போட்டியை தேர்வு செய்தார். வாரத்துக்கு ஆறு நாட்கள், தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி செய்வார். 2016ல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், உலக சாதனை (86.48 மீ.,) படைத்தார். 

ஆசிய விளையாட்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) தங்கம் வெல்வதை லட்சியமாக வைத்துள்ளார். தற்போது ஆசிய விளையாட்டில் சாதித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஷிவ் பால் சிங் (74.11 மீ.,) எட்டாவது இடம் பிடித்தார். 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?