Advertisement


துலீப் டிராபி: பைனலில் இந்தியா ‘ரெட்’

ஆகஸ்ட் 26, 2018.
 Comments  
 


Siddhesh Lad, india red team
 

நத்தம்: இந்தியா ‘புளூ’ அணிக்கு எதிரான துலீப் டிராபி லீக் போட்டியை ‘டிரா’ செய்த இந்தியா ‘ரெட்’ அணி பைனலுக்கு முன்னேறியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் முதல் தர உள்ளூர் தொடரான துலீப் டிராபி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா ‘ரெட்’ அணி, இந்தியா ‘புளூ’ அணியை சந்தித்தது. முதல் இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ 316, இந்தியா ‘புளூ’ 293 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ அணி 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. சித்தேஷ் லத் (47), அக்சய் வாட்கர் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

சித்தேஷ் அரைசதம்

4ம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்தியா ‘ரெட்’ அணியின் அக்சய் வாட்கர் (47) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய சித்தேஷ் லத் (68) அரைசதம் கடந்தார். அஷுதோஷ் சிங் (0), பர்வேஸ் ரசூல் (2) ஏமாற்றினர். நதீம் (1), குர்பானி (1), போரல் (4) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அபிமன்யு மிதுன் (47*) ஓரளவு கைகொடுக்க, 2வது இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ அணி 255 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா ‘புளூ’ அணி சார்பில் அக்சய் வகாரே, சவுரப் குமார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

279 ரன் இலக்கு

பின், 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘புளூ’ அணிக்கு கேப்டன் பசால் (39), துருவ் ஷோரே (45) நல்ல துவக்கம் தந்தனர். பர்வேஸ் ரசூல் ‘வேகத்தில்’ அபிஷேக் ராமன் (9) வெளியேறினார். சபாஸ் நதீம் ‘சுழலில்’ ரிக்கி புய் (1), அன்மால்பிரீத் சிங் (3), சவுரப் குமார் (2), ஜெயதேவ் உனத்கட் (1) சிக்கினர். ஸ்ரீகர் பாரத் (4) ஏமாற்றினார். கடைசி நாள் முடிவில் 2வது இன்னிங்சில் இந்தியா ‘புளூ’ அணி 8 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. குல்கர்னி (4), பண்டாரு ஐயப்பா (15) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா ‘ரெட்’ அணி சார்பில் நதீம் 5, ரசூல் 3 விக்கெட் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் இந்தியா ‘ரெட்’ அணிக்கு 3 புள்ளி வழங்கப்பட்டது. இந்தியா ‘புளூ’ அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது. இதனையடுத்து 2 போட்டியில் 6 புள்ளிகள் பெற்ற இந்தியா ‘ரெட்’ அணி பைனலுக்கு முன்னேறியது.

வரும் 29ல் துவங்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா ‘புளூ’, இந்தியா ‘கிரீன்’ அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் இருப்பதால், இப்போட்டியில் வெல்லும் அணி பைனலுக்கு தகுதி பெறும்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?