Advertisement


சாதிப்பாரா ஜோகோவிச்

ஆகஸ்ட் 26, 2018.
 Comments  
 


Djokovic, us open tennis
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. இதில் செர்பியாவின் ஜோகோவிச் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 3வது முறையாக கோப்பை வென்று சாதிக்கலாம்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ்., ஓபன் இன்று துவங்குகிறது. இதில் ஜோகோவிச் (செர்பியா), நடால் (ஸ்பெயின்), பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆன்டி முர்ரே (பிரிட்டன்) என, 4 மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் கிராண்ட்ஸ்லாம் தொடரில் களமிறங்குகின்றனர். ‘நடப்பு சாம்பியன்’ நடால், இந்த ஆண்டில் பிரெஞ்ச் ஓபனில் மட்டும் கோப்பை வென்றார். ‘நம்பர்–1’ வீரரான இவர், முதல் சுற்றிலேயே சக வீரர் டேவிட் பெரரை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஜோகோவிச்சை பொறுத்தவரை, சமீபத்தில் முடிந்த விம்பிள்டனில் பட்டம் வென்ற உற்சாகத்தில் உள்ளார். யு.எஸ்., ஓபனில் 2011,15ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இவர், ஐந்து முறை (2007, 2010, 2012, 2013, 2016) பைனலில் வீழ்ந்துள்ளார். சமீபத்தில் சின்சினாட்டி ஓபன் பைனலில் பெடரரை வீழ்த்தி, 9 ‘மாஸ்டர்ஸ்’ தொடரிலும் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்த இவர், முழுத்திறமையை வெளிப்படுத்தினால் மூன்றாவது முறையாக கோப்பையை வசப்படுத்தலாம்.

10 ஆண்டுக்குப்பின்...

உலகின் ‘நம்பர்–2’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 37, இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் மகுடம் சூடினார். யு.எஸ்., ஓபனில் 2004–08 வரை தொடர்ந்து 5 முறை கோப்பை வென்றார். அதன்பின் 2 முறை (2009, 2015) பைனலோடு திரும்பினார். இம்முறை ஜொலித்தால், ‘ஓபன் எராவில்’ யு.எஸ்., ஓபனில் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனை படைக்கலாம்.

முன்னாள் ‘நம்பர்–1’ வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுமார் ஒரு ஆண்டுக்குப்பின் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தடம் பதிக்கிறார். இடுப்புப்பகுதி காயத்திலிருந்து மீண்டாலும், தரவரிசையில் 378வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அர்ஜென்டினாவின் டெல் போட்ரோ, சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா நெருக்கடி தரலாம்.

செரினா எதிர்பார்ப்பு

பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்முறை சாதித்தால், தாயான பின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 4வது வீராங்கனை என்ற பெருமை பெறலாம். தவிர, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட்டுடன்(24) முதலிடத்தை பகிர்ந்து கொள்ளலாம். இது தவிர, ‘நடப்பு சாம்பியன்’ ஸ்லோனா ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), உலகின் ‘நம்பர்–1’ சிமோனா ஹாலெப் (ருமேனியா) உள்ளிட்டோர் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

பரிசு எவ்வளவு

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் கோப்பை வெல்லும் வீரர்/வீராங்கனைக்கு சாம்பியன் பட்டத்துடன் ரூ. 26.51 கோடி பரிசு வழங்கப்படும். பைனல் வரை சென்று 2வது இடம் பிடிக்கும் வீரர்/வீராங்கனைக்கு ரூ. 12.90 கோடி பரிசு வழங்கப்படும்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?