Advertisement


தடம் மாறிய தமிழக வீரர் லட்சுமண்: பறிபோனது வெண்கலம்

ஆகஸ்ட் 26, 2018.
 Comments [1]  
 


Lakshmanan, asian games 2018, silver, Hima, Dutee, Anas
 

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு 10,000 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமண் தடம் மாறி ஓடியதால் வெண்கலப் பதக்கம் பறிபோனது. தடகளத்தில் அசத்திய மற்ற இந்திய நட்சத்திரங்களான ஹிமா தாஸ் (400 மீ., ஓட்டம்), முகமது அனாஸ் (400 மீ., ஓட்டம்), டுட்டி சந்த் (100 மீ., ஓட்டம்) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.

இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீ., ஓட்டத்தின் பைனலில் தமிழக வீரர் லட்சுமண் பங்கேற்றார். இவர், பந்தய துாரத்தை 29 நிமிடம் 44.91 வினாடியில் கடந்து மூன்றாவது இடம் பிடித்தார். பின்னர் இவர் தடம் மாறி ஓடியது தெரியவர வெண்கலப் பதக்கத்தை பரிதாபமாக பறிகொடுத்தார். இதனையடுத்து நான்காவது இடம் பிடித்த சீனாவின் சான் ஹாங்கிற்கு வெண்கலம் வழங்கப்பட்டது. தங்கம், வெள்ளி முறையே பக்ரைனின் ஹசன் (28:35.54 நிமிடம்), ஆப்ரஹாம் (29:00.29) கைப்பற்றினர்.


ஹிமா அபாரம்

பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் ஹிமா தாஸ், நிர்மலா, பக்ரைனின் நாசிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சீறிப்பாய்ந்த ஹிமா தாஸ் பந்தய துாரத்தை 50.79 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். தவிர, இம்முறை இரண்டாவது முறையாக தேசிய சாதனை படைத்தார். ஏற்கனவே, இதன் தகுதிச்சுற்றில் (51.00) சாதித்திருந்தார். ஆசிய விளையாட்டில் சாதனை படைத்த நாசிர் (50.09) தங்கம் கைப்பற்றினார். கஜகஸ்தானின் எலினா வெண்கலம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை நிர்மலாவுக்கு (52.96) 4வது இடமே கிடைத்தது.

பைனலில் அனு

பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனு ராகவன், 56.77 வினாடியில் இலக்கை அடைந்து ஒட்டுமொத்தமாக 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். சக வீராங்கனை ஜானு 59.20 வினாடியில் கடந்து 8வது இடத்துடன் பைனலுக்குள் நுழைந்தார்.

அனாஸ் அசத்தல்

ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் முகமது அனாஸ், ஆரோக்ய ராஜிவ், ஜப்பானின் வால்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அபாரமாக செயல்பட்ட அனாஸ் இலக்கை 45.69 வினாடியில் கடந்து வெள்ளி கைப்பற்றினார். தங்கம், வெண்கலம் முறையே கத்தாரின் அப்துல்லா (44.89), பக்ரைனின் காமிஸ் வென்றனர். மற்றொரு இந்திய வீரர் ஆரோக்ய ராஜிவ் 4வது இடம் பிடித்தார். 

பைனலில் தமிழக வீரர்கள் 

ஆண்கள் 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் அரையிறுதியில் அபாரமாக விளையாடிய தமிழகத்தின் தருண் அய்யாசாமி (49.55 வினாடி), சந்தோஷ்குமார் தமிழரசன் (50.46 வினாடி) முறையே 2, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.

துடிப்பான டுட்டி 

பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் துடிப்பாக செயல்பட்ட இந்தியாவின் டுட்டி சந்த் இலக்கை 11.32 வினாடியில் எட்டி 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். தங்கம், வெண்கலம் முறையே பக்ரைனின் எடிடியாங் (11.30), சீனாவின் யாங்லி (11.33) கைப்பற்றினர். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் ஆசிய விளையாட்டு பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 1998ல் இந்திய வீராங்கனை ரசிதா மிஸ்ட்ரி வெண்கலம் வென்றிருந்தார்.

ஸ்ரீசங்கர் ஏமாற்றம்

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் பங்கேற்றார். இவர் இரண்டாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 7.95 மீ., தாண்டினார். மற்ற இரண்டு வாய்ப்பை வீணடிக்க, ஆறாவது இடம் பிடித்து ஏமாற்றினார்.

 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
c. murugadoss 4 weeks ago | Report abuse
சாரி லக்ஷ்மன், கவலை படாதீங்க அடுத்த முறை தங்கம் கிடைக்கும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?