Advertisement


அபினவ் முகுந்த் அரைசதம்

ஆகஸ்ட் 25, 2018.
 Comments  
 


Duleep Trophy Cricket, India Red, Abhinav Mukund, India Blue
 

நத்தம்: துலிப் டிராபி லீக் போட்டியில் இந்தியா ‘ரெட்’ அணி கேப்டன் அபினவ் முகுந்த் அரைசதம் அடித்தார்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் முதல் தர தொடரான துலீப் டிராபி நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் (நான்கு நாள்) இந்தியா ‘ரெட்’, இந்தியா புளூ அணிகள் மோதுகின்றன.முதல் இன்னிங்சில் ‘ரெட்’ அணி 316 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள்ஆட்ட நேர முடிவில்,புளூ அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது.ஷோரே (86) அவுட்டாகாமல் இருந்தார்.

சதம் நழுவல்: மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்தியா புளூ அணியின் ஷோரே (97) சத வாய்ப்பை நழுவவிட்டார். உனத்கட், குல்கர்னி தலா 39 ரன்கள் எடுத்தனர். புளூ அணி முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அபினவ் அரைசதம்: பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘ரெட்’ அணிக்கு சஞ்சய் (6), பாபா அபராஜித் (19) விரைவில் திரும்பினர். கேப்டன் அபினவ் முகுந்த் (50) அரை சதம் எட்டினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ அணி 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து, 179 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. சிதேஷ் (47), வாட்கர் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?