Advertisement


பெண்கள் ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஆகஸ்ட் 25, 2018.
 Comments  
 


Asian Games 2018, Womens Hockey, India beat South Korea
 

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கியில் அசத்திய இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. லீக் போட்டியில் 4–1 என, தென் கொரியாவை தோற்கடித்தது.

இந்தோனேஷியாவில், 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. முதலிரண்டு போட்டியில் இந்தோனேஷியா, கஜகஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்தியா, 3வது லீக் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர், ஒரு ‘பீல்டு’ கோல் அடித்தார். இதற்கு 21வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பில் தென் கொரியாவின் லீ யுரிம் ஒரு கோலடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவில் போட்டி 1–1 என சமநிலையில் இருந்தது.

தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 54, 55வது நிமிடங்களில் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் குர்ஜித் கவுர் கோலடித்து கைகொடுத்தார். பின், 56வது நிமிடத்தில் இந்தியாவின் வந்தனா ஒரு ‘பீல்டு’ கோலடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய தென் கொரிய வீராங்கனைகளால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4–1 என வெற்றி பெற்று, 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. கடைசி லீக் போட்டியில் (ஆக. 27) இந்திய அணி, தாய்லாந்தை சந்திக்கிறது.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?