Advertisement


இந்தியா ‘பி’ அணி வெற்றி

ஆகஸ்ட் 25, 2018.
 Comments  
 


India B, Mayank Agarwal, Quadrangular ODI Series, Cricket, India A
 

பெங்களூரு: இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான லீக் போட்டியில் மயங்க் அகர்வால் சதம் கடந்து கைகொடுக்க இந்தியா ‘பி’ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூருவில், நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டியில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இந்தியா ‘ஏ’ அணிக்கு ரவிக்குமார் சமர்த் (0), சூர்யகுமார் யாதவ் (11) ஏமாற்றினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (20), நிதிஷ் ராணா (9), குர்னல் பாண்ட்யா (18) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடு (48), சஞ்சு சாம்சன் (32), கிருஷ்ணப்பா கவுதம் (35) ஆறுதல் தந்தனர். இந்தியா ‘ஏ’ அணி 49 ஓவரில் 217 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா ‘பி’ அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய இந்தியா ‘பி’ அணிக்கு இஷான் கிஷான் (25) நல்ல துவக்கம் தந்தார். சுப்மன் கில் (42) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய மயங்க் அகர்வால் (124) சதம் கடந்து கைகொடுத்தார். இந்தியா ‘பி’ அணி 41.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் மணிஷ் பாண்டே (21), கேதர் ஜாதவ் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ (322/5) அணி, 32 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ (290/10) அணியை வீழ்த்தியது.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?