Advertisement


காலிறுதியில் செய்னா, சிந்து

ஆகஸ்ட் 25, 2018.
 Comments  
 


Asian Games 2018, Badminton, Saina, Sindhu, Ashwini Ponnappa
 
ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு பாட்மின்டனில் இந்தியாவின் செய்னா, சிந்து காலிறுதிக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவில் அஷ்வின், சிக்கி ரெட்டி ஜோடி ஏமாற்றியது. 

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தரவரிசையில் 10வது இடத்திலுள்ள இந்தியாவின் செய்னா, இந்தோனேஷியாவின் பிட்ரியானியை (40வது இடம்) 21–6, 21–14 என்ற நேர் செட்களில் வீழ்த்தி,   காலிறுதிக்குள் நுழைந்தார்.

சிந்து ஆதிக்கம்: மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து, இந்தோனேஷியாவின் மிரிஸ்காவை 21–12, 21–15 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். 

அஷ்வினி ஜோடி ஏமாற்றம்: பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி 11–21, 22–24 என சீனாவின் கிங்சென், இபன் ஜோடியிடம் போராடி வீழ்ந்தது. 

சிராக் ஜோடி தோல்வி: ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 17–21, 21–19, 17–21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சோல்ஜியு, மின்ஹியுக் ஜோடியிடம் வீழ்ந்தது. 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் மானு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 13–21, 21–17, 23–25 என சீனாவின் ஜூன்ஹிய், யுசென் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?