Advertisement


மீண்டது இந்தியா ‘புளூ’

ஆகஸ்ட் 24, 2018.
 Comments  
 


Dhruv Shorey
 

நத்தம்: துலீப் டிராபி லீக் போட்டியில் ஷோரே அரை சதம் அடிக்க, இந்திய புளூ அணி சரிவிலிருந்து மீண்டது. 

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் முதல் தர தொடரான துலீப் டிராபி நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் (நான்கு நாள்) இந்தியா ‘ரெட்’, இந்தியா புளூ அணிகள் மோதுகின்றன. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா ‘ரெட்’ அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. 

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. சிதேஷ் 88 ரன்கள் எடுத்தார். உனத்கட் ‘வேகத்தில்’ ரசூல் (8) சிக்கினார். மிதுன் (31) ஓரளவு கைகொடுத்தார்.  இந்தியா ‘ரெட்’ அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புளூ அணி சார்பில் சவுரப் குமார், அக்சய் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஷோரே அரை சதம்

பின், முதல் இன்னிங்சை துவக்கிய புளூ அணிக்கு அபிஷேக் ராமன் (12), கேப்டன் பைஸ் பாசல் (1), அன்மோல்பிரீத் சிங் (1) ஏமாற்றினர். துருவ் ஷோரே, ரிக்கி புய் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரிக்கி 41 ரன்கள் எடுத்தார். ஷோரே அரை சதம் கடந்தார். ரசல் பந்தில் ஸ்ரீகர் பரத் (35) அவுட்டானார். ஆட்ட நேர முடிவில், புளூ அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து, 133 ரன்கள் பின்தங்கி இருந்தது. ஷோரே (86) அவுட்டாகாமல் இருந்தார்.

 

Advertisement

பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் , போட்டி 6
Asia Cup, 2018
9/20/2018 , 17:00
ஷேக் ஜாயேத் ஸ்டேடியம், அபு தாபி

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?