Advertisement


கால்பந்து: இந்தியா– சிட்னி மோதல்

ஆகஸ்ட் 24, 2018.
 Comments  
 


india, soccer team,
 

புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி சிட்னி கிளப் அணியுடன் மோதுகிறது.

வங்கதேசத்தில் வரும் செப்டம்பர் 4ல் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் துவங்குகிறது. 

இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதற்கான, பயிற்சியாக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 3 நட்பு போட்டிகளில் விளையாடுகிறது. இதன் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

முதல் லீக் போட்டியில் (ஆக. 25) லெய்சர்ட் டைகர்ஸ் கிளப் அணியை எதிர் கொள்கிறது. சமீபத்திய வராடா உள்ளூர் கோப்பை தொடரில் இந்த அணி பட்டம் வென்றிருந்தது. இதைப்போல, இரண்டாவது லீக் போட்டியில் (ஆக. 28) சிட்னி கிளப் அணியுடன் மோதுகிறது. 

‘ஏ’ லீக் தொடரில், நடப்பு சாம்பியனாக சிட்னி அணி இருப்பதால், இந்திய அணிக்கு கடும் சவால் தரலாம். இந்திய வீரர்கள் தனது கடைசி மற்றும் மூன்றாவது லீக் போட்டியில் ரெய்டல்மிர் அணியுடன் மோத உள்ளனர்.

இது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் கான்ஸ்டான்டின் கூறுகையில்,‘‘ கடந்த மூன்று ஆண்டாக சிட்னி கிளப் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால், நமது அணிக்கு இப்போட்டி சவால் தருவதாக அமையும்,’’ என்றார்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?