Advertisement


போபண்ணா, திவிஜ் ஜோடி தங்கம்: இரட்டையர் டென்னிசில் அபாரம்

ஆகஸ்ட் 24, 2018.
 Comments  
 


Bopanna, Sharan, asian games tennis, gold
 

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு டென்னிஸ் இரட்டையர் பைனலில் இந்தியாவின் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி தங்கம் கைப்பற்றியது. தமிழக வீரர் குன்னேஸ்வரன் வெண்கலம் கைப்பற்றினார். 

இந்தோனேஷியாவில் 18 வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்திய ஜோடி, டெனிஸ், அலெக்சாண்டர் (கஜகஸ்தான்) ஜோடியை 6–3, 6–4 என நேர் செட்களில் வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 

முதன் முறை

ஆண்கள் இரட்டையரில் போபண்ணா, திவிஜ் சரண் தங்கம் வென்றது இதுவே முதன் முறை. தவிர ஆசிய விளையாட்டில் போபண்ணா வென்ற முதல் பதக்கமும் இது தான். இதற்கு முன் 2006 தொடரில் போபண்ணா காலிறுதிக்கு முன்னேறியதே அதிகம். 

குன்னேஸ்வரன் ‘வெண்கலம்’

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தமிழக வீரர் குன்னேஸ்வரன், வலிமையான உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்தோமினிடம் 2–6, 2–6 என வீழ்ந்து, வெண்கலப்பதக்கம் பெற்றார்.

ஹீனா சித்து வெண்கலம்

துப்பாக்கிசுடுதலில் பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் போட்டிகள் நடந்தன. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாகர் (574 புள்ளி) 3வது, ‘சீனியர்’ ஹீனா சித்து (571) 7வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். 

இதில் சொதப்பிய மனு பாகர் 18 சுற்று முடிவில் 5வது இடம் பிடித்து வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஹீனா சித்து (219.2 புள்ளிகள்), 7 வது இடத்தில் இருந்து முன்னேறி 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். 

 ஒரே நாளில் ‘7’

ஆசிய விளையாட்டில் நேற்று மட்டும் இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் கிடைத்தன. 

தங்கம்

* டென்னிஸ் ஆண்கள் இரட்டையர்

* படகு வலித்தல் அணி (4 பேர்)

வெள்ளி

* கபடி பெண்கள் அணி

வெண்கலம்

* டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர்

* படகு வலித்தல் தனி நபர்

* படகு வலித்தல் இருவர்

* துப்பாக்கிசுடுதல், பெண்கள் 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?