Advertisement


படகு வலித்தல்: இந்திய அணி தங்கம்

ஆகஸ்ட் 24, 2018.
 Comments [1]  
 


men quadruple sculls team bags gold, India asian games
 

ஜகார்த்தா: ஆசிய படகு வலித்தல் நான்கு நபர் அணிகளுக்கான போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. தவிர, தனிநபர் மற்றும் இருநபர் பிரிவுகளில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.

நேற்று நடந்த நான்கு நபர் படகு வலித்தல் (‘குவாடுருபிள் ஸ்கல்ஸ்’) பைனலில் இந்தியா சார்பில் சுவர்ன் சிங், 28, தத்து போகனல், 27, ஓம் பிரகாஷ், 27, சுக்மீட் சிங், 24, அடங்கிய அணி களமிறங்கியது.இதில் 6 நிமிடம், 17.13 வினாடி நேரத்தில் வந்து இந்திய அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அடுத்த இரு இடங்களை இந்தோனேஷியா, தாய்லாந்து பிடித்தன.

துஷ்யந்த் வெண்கலம்

ஆண்கள் ‘லைட் வெயிட்’ தனிநபர் பைனலில் இந்திய வீரர் துஷ்யந்த், 7:18.76 நிமிடத்தில் வந்து மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். இவர் 2014 ஆசிய விளையாட்டிலும் வெண்கலம் வென்றிருந்தார்.

‘இருவர்’ பதக்கம்

ஆண்கள் ‘லைட் வெயிட்’ இருநபர் பைனலில் இந்தியாவின் ரோகித் குமார், பகவான் சிங் அடங்கிய அணி 7 நிமிடம், 4.61 வினாடி நேரத்தில் வந்து மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றியது.

பெண்கள் நான்கு நபர் பிரிவு பைனலில் இந்தியாவின் சஞ்சுட்கா, அன்னு, நவ்னீத்கவுர், யாமினி அடங்கிய அணிக்கு கடைசி இடம் தான் கிடைத்தது. ஆண்கள் எட்டு பேர் அடங்கிய அணிக்கான பைனலில் இந்திய அணி, 0.54 வினாடி நேரத்தில் பின்தங்கி நான்காவது இடம் பெற்று வெண்கல வாய்ப்பை இழந்தது.

ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா 

ஆசிய ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தமிழக வீராங்கனை தீபிகா பல்லீகல், 26, ஜப்பானின் மிசாகியை சந்தித்தார். இதில் 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா 3–1 என ஹாங்காங்கின் ஹோ லீங்கை வென்றார். ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சவுரவ் கோசல், சக வீரர் ஹர்மீத் சிங்கை 3–1 என வீழ்த்தினார். இதையடுத்து ஸ்குவாஷ் ஒற்றையரில் இந்தியாவுக்கு மூன்று வெண்கல பதக்கங்கள் உறுதியாகின. 

பாட்மின்டன்: காலிறுதியில் அஷ்வினி ஜோடி

ஆசிய விளையாட்டு பாட்மின்டன் பெண்கள் இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் சோவ், லீ மி ஜோடியை 21–17, 16–21, 21–19 என வென்றது. 

இதையடுத்து 1986க்குப் பின் ஆசிய பாட்மின்டனில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் ஜோடி என பெருமை பெற்றனர். இதற்கு முன் மல்லிகா, ஹப்ரிஷ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறி இருந்தது. 

ஜிம்னாஸ்டிக்ஸ்: தீபா 5வது இடம் 

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் பேலன்ஸ் பீம் பிரிவு பைனல் நேற்று நடந்தது. அணிகள் பிரிவில் பங்கேற்காமல் விலகிய இந்தியாவின் தீபா கர்மாகர், இதில் களமிறங்கினார். இவர் 12.500 புள்ளிகள் மட்டும் பெற்று 5வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் ‘ஷாக்’

பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் தோற்று வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 

  நேற்று நேரடியாக இரண்டாவது சுற்றில் களமிறங்கிய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் வின்சென்ட் விங்கிடம் 21–23, 19–21 என போராடி வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் பிரனாய், 12–21, 21–15, 15–21 என தாய்லாந்தின் கன்தபோனிடம் சரிந்தார். 

வில்வித்தை: தீபிகா கண்ணீர்

வில்வித்தை ‘ரீகர்வ்’ கலப்பு இரட்டையர் ‘ரவுண்டு–16’ சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, அடானு தாஸ் ஜோடி, மங்கோலிய ஜோடியிடம் ‘ஷூட் ஆப்’ முறையில் 4–5 என வீழ்ந்தது. இதனால், தீபிகா அழுதார்.

* காம்பவுண்டு பிரிவு கலப்பு இரட்டையர் ‘ரவுண்டு–16’ சுற்றில் இந்தியாவின் ஜோதி, அபிஷேக் ஜோடி 155–147 என ஈராக்கை வீழ்த்தியது. அடுத்த நடந்த காலிறுதியில் இந்திய ஜோடி, ஈரானிடம் 153–155 என தோல்வியடைந்தது. 

ஹேண்ட்பால்: இந்தியாவிடம் வீழ்ந்த பாக்.,

ஆண்கள் ஹேண்ட்பால் லீக் போட்டியில் ‘குரூப் 3’ ல் இடம் பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானை 28–27 என்ற கணக்கில் வீழ்த்தி, ‘திரில்’ வெற்றி பெற்றது. 

கோல்ப்:  இந்தியா 2வது இடம்

ஆசிய கோல்ப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஆடில் பேடி 3, ரியான் தாமஸ் 6, நவ்னீத் 10, ஹரி மோகன் 36 வது இடத்தில் உள்ளனர். அணிகள் பிரிவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 

* பெண்கள் ஒற்றையர் 2வது சுற்று முடிவில் இந்தியாவின் சிபாத் 20, ரித்திமா 26, திக் ஷா 27 வது இடத்தில் உள்ளனர். அணிகள் பிரிவில் 9 வது இடத்தில் உள்ளது. 

நீச்சல்: சந்தீப் ‘7’

ஆண்கள் 50 மீ., பிரஸ்ட் ஸ்டிரோக் நீச்சல் தகுதிச்சுற்றில் 27.95 வினாடியில் வந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் சந்தீப் சேஜ்வல் பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் இவர் 7வது (27.98 வினாடி) இடம் மட்டும் பிடித்தார்.

வாள் சண்டை ஏமாற்றம்

பெண்கள் எபீ அணிகளுக்கான ‘ரவுண்டு–16’ வாள் சண்டை போட்டியில் கபிதா தேவி, ஜோதிகா, எனா அரோரா அடங்கிய இந்திய அணி 25–24 என இந்தோனேஷியாவை வீழ்த்தியது. காலிறுதியில் சீனாவிடம் 25–45 என தோற்றது.

குத்துச்சண்டை: மனோஜ் கலக்கல்

ஆண்கள் குத்துசண்டை ‘வெல்டர் வெயிட்’ (69 கி.கி.,) பிரிவில் இந்தியாவின் மனோஜ் குமார், 5–0 என பூடானின் வாங்டியை வென்றார். 

* ‘பிளை வெயிட்’ (52 கி.கி.,) போட்டியில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி, 0–5 என கிர்கிஸ்தானின் ஆசாத்திடம் வீழ்ந்தார். 

 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 4 weeks ago | Report abuse
இன்னும் வெல்லட்டும் தங்கம்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?