Advertisement


பைனலில் போபண்ணா ஜோடி

ஆகஸ்ட் 23, 2018.
 Comments  
 


Bopanna, asian games, tennis
 

ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி, முதல் செட்டை 4–6 என ஷிமா, கெய்ட்டோ (ஜப்பான்) ஜோடியிடம் இழந்தது. அடுத்த செட்டை 6–3 என போபண்ணா ஜோடி வெல்ல, வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘சூப்பர் டைபிரேக்கருக்கு’ சென்றது. இதில் அசத்திய போபண்ணா ஜோடி 10–8 என வென்றது. 

முடிவில் போபண்ணா ஜோடி 4–6, 6–4, 10–8 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று டெனிஸ், அலெக்சாண்டர் (கஜகஸ்தான் ஜோடியை சந்திக்கிறது. இதில் வென்றால் தங்கப்பதக்கம் கைப்பற்றிலாம்.

குன்னேஸ்வரன் அபாரம்

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தமிழக வீரர் குன்னேஸ்வரன், தென் கொரியாவின் சூன்ஊவை சந்தித்தார். சுமார் நான்கு மணி நேரம் (3 மணி, 55 நிமிடம்) நீடித்த இப்போட்டியில் குன்னேஸ்வரன் 6–7, 6–4, 7–6 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதையடுத்து குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா, அன்கிதா ஜோடி, இந்தோனேஷியாவின் சுடிஜியாடி, ரங்கட் ஜோடியிடம் 4–6, 6–1, 6–10 என வீழ்ந்தது. 

காலிறுதியில் நாவோரம்

பென்காக் சிலாட் (பாரம்பரிய விளையாட்டு) போட்டி ‘ரவுண்டு–16’ சுற்றில் இந்திய வீரர் நாவோரம் சிங், 5–0 என கிர்கிஸ்தானின் சுலைமான்குலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

கூடைப்பந்து: பெண்கள் தோல்வி

பெண்கள் கூடைப்பந்து ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, இந்தோனேஷியாவிடம் 66–69 என கடைசி வினாடியில் வீழ்ந்து, காலிறுதி வாய்ப்பை இழந்தது. 

சறுக்கிய படகு வலித்தல்

படகு வலித்தலில் நேற்று நடந்த பைனல்களில் இந்தியாவுக்கு ஏமாற்றம் கிடைத்தது. ஆண்கள் ஒற்றையரில் தத்து போகனல் (8:28.56 நிமிடம்) கடைசி இடம் பிடித்தார். 

* ஆண்கள் இரட்டையரில் ஓம் பிரகாஷ், சவர்ன் சிங் (6:50.91 நிமிடம்) 4வது இடம் பெற்று, வெண்கலத்தை இழந்தது. 

* பெண்கள் இரட்டையரில் சயாலி, பூஜா ஜோடி (8:21.76 நிமிடம்) கடைசி இடம் பிடித்தது. ‘லைட் வெயிட்’ பிரிவில் (4 பேர்) இந்திய அணி 4வது இடம் பெற்றது. 

காலிறுதியில் தீபிகா 

பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் நேரடியாக பங்கேற்ற இந்தியாவின் தீபிகா பல்லீகல், இந்தோனேஷியாவின் எனி சிடியை 3–0 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார். 

* மற்றொரு போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, ஜெமிகாவை (பிலிப்பைன்ஸ்) 3–0 என வென்று காலிறுக்குள் நுழைந்தார். 

* ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் முதல் சுற்றில் சவுரவ் கோசல் 3–0 என, முகமதுவை (இலங்கை) வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் அஸ்லாமை (பாக்.,) 3–1 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு போட்டியில் ஹரிந்தர் பால் சிங், 3–1 என ஆன்ட்ரூவை (பிலிப்பைன்ஸ்) வென்றார். இன்று நடக்கும் காலிறுதியில் சவுரவ் கோசல், ஹரிந்தர் மோதுகின்றனர். 

வாலிபால்: இந்தியா தோல்வி

பெண்கள் வாலிபால் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, கஜகஸ்தானிடம் 0–3 என தோற்றது. 

பளுதுாக்குதல்: சதீஷ் ‘10’

ஆண்கள் 77 கி.கி., பளுதுாக்குதல் போட்டியில் இந்தியாவின் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் பங்கேற்றார். 2014, 2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இவர் இம்முறை ஸ்னாட்ச் பிரிவில் 144, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் முதலில் 170 கி.கி., பின் 178 கி.கி., துாக்க முயற்சித்த போது காயம் அடைந்தார். முடிவில் இவருக்கு 10 வது இடம் (314 கி.கி.,) தான் கிடைத்தது. 

மற்றொரு இந்திய வீரர் அஜய் சிங் 327 கி.மீ., எடை துாக்கி 5வது இடம் மட்டும் பிடித்தார். 

அருணா ‘7’

ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இந்தியாவின் அருணா ரெட்டி 12.775 புள்ளிகள் மட்டும் பெற 7வது இடம் பிடித்தார். மற்றொரு வீராங்கனை பிரனதி (12.650) 8வது இடம் பெற்று ஏமாற்றினார். 

தீபிகா குமாரி ஏமாற்றம்

வில்வித்தை ‘ரீகர்வ்’ பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தீபிகா குமாரி, முதல் போட்டியில் 6–2 என ரி ஜியை (வட கொரியா) வென்றார். காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இவர், 3–7 என லெய் சியனிடம் (சீன தைபே) தோற்றார். 

* ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் அடானு தாஸ், 7–3 என இகாவிடம் (இந்தோனேஷியா) தோற்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் விஸ்வாஷ், புரோமிளா தோல்வியடைந்தனர். 

ஸ்ரீஹரி தேசிய சாதனை

ஆண்கள் நீச்சல் 200 மீ., பேக் ஸ்டிரோக் தகுதிசுற்றில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், 2:02.97 நிமிட நேரத்தில் வந்து 7வது இடம் பிடித்தார். பைனலில் இவர் (2:02.83) சிறப்பாக செயல்பட்ட போதும் 6வது இடம் தான் கிடைத்தது. இருப்பினும் இது புதிய தேசிய சாதனை ஆனது.

 

Advertisement

இந்தியா vs ஹாங்காங் , போட்டி 4
Asia Cup, 2018
9/18/2018 , 17:00
Dubai International Cricket Stadium, Dubai

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?