Advertisement


கோஹ்லி ‘நம்பர்–1’

ஆகஸ்ட் 23, 2018.
 Comments  
 


kohli, india, test ranking
 

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் போட்டிக் கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி மீண்டும் முதலிடத்தை எட்டினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் கோஹ்லி ஒரு இடம் முன்னேறி, ‘நம்பர்–1’ இடத்தை (937 புள்ளி) மீண்டும் எட்டினார். 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ‘ரன் மெஷினாக’ (97, 103) மாறிய இவர் வெற்றிக்கும் கைகொடுத்ததால், இந்த முன்னேற்றம் அடைந்துள்ளார். இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே ஆஸ்தி ரேலியாவின் ஸ்மித் (929), நியூசிலாந்தின் வில்லியம்சன் (847) உள்ளனர்.

கோஹ்லி இன்னும் ஒரு புள்ளி (938) கூடுதலாக பெற்றால், தரவரிசை வரலாற்றில் ஒட்டு மொத்தமாக அதிக புள்ளிகள் எடுத்த ‘டாப்–10’ வீரர்கள் பட்டியலில் இடம் பெறலாம். 

தற்போது, 10வது இடத்தில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா, வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்டோர் தலா 938 புள்ளியுடன் உள்ளனர். முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (961) வகிக்கிறார். மற்ற இந்திய வீரர்களில் ரகானே (19வது இடம்), தவான் (22) தலா 4 இடம் முன்னேறி உள்ளனர்.

பாண்ட்யா முன்னேற்றம்

பவுலர்களுக்கான பட்டியலில், மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய பாண்ட்யா 23 இடம் முன்னேறி 51வது இடத்தை எட்டி உள்ளார். முதல் மூன்று இடங்களில் முறையே இங்கிலாந்தின் ஆண்டர்சன், தென் ஆப்ரிக்காவின் ரபாடா, இந்தியாவின் ஜடேஜா உள்ளனர்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?