Advertisement


காமரூனை சாய்த்தது இளம் இந்தியா

ஆகஸ்ட் 23, 2018.
 Comments  
 


india under 16 team, soccer
 

இஸ்தான்புல்: காமரூன் அணிக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் இளம் இந்திய அணி 2–1 என வெற்றி பெற்றது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இந்தியா, காமரூன் (16 வயதுக்குட்பட்டோர்) அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி நடந்தது. 

ஆப்ரிக்க கண்டத்தில் அச்சுறுத்தும் அணியான காமரூன் கடும் சவால் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய இளம் வீரர்கள் துடிப்பாக விளையாடினர். போட்டி துவங்கிய 30வது வினாடியில், இந்திய கேப்டன் விக்ரம் சிங் தந்த பந்தை பெற்ற சக வீரர் மெல்வின் அப்படியே கோலாக்கினார். 5வது நிமிடத்தில் விக்ரமின் கோலாக்கும் முயற்சியை, எதிரணி கோல்கீப்பர் தடுத்தார். 20வது நிமிடத்தில் ரோகித் தானு அசத்த, இந்திய அணி 2–0 என முதல் பாதியில் முன்னிலை பெற்றது. இதற்கு, காமரூன் சார்பில் 63வது நிமிடத்தில் பதிலடி தரப்பட்டது. 

முடிவில்,  இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஓமனிடம் வீழ்ந்த இந்தியா, இம்முறை எழுச்சி பெற்றது. 

மூன்றாவது போட்டியில் துருக்கியின் பிசிகிட்ஸ் அணியை (ஆக. 26) எதிர் கொள்கிறது.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?