Advertisement


அசத்திய ‘வேகங்கள்’

ஆகஸ்ட் 22, 2018.
 Comments  
 


bumrah, india, test, win
 

இப்போட்டியில் இஷாந்த், பாண்ட்யா, பும்ரா உள்ளிட்டோர் இணைந்து மொத்தம் 19 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வகையில் இது 2வது இடம் பிடித்தது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஜோகனஸ்பர்க் (2018, 20 விக்.,) டெஸ்ட் முதலிடத்தில் உள்ளது.

2

விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணி 22வது டெஸ்ட் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணிக்கு அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் பட்டியலில் கங்குலியை (21 வெற்றி, 38 போட்டி) முந்தி 2வது இடம் பிடித்தார். முதலிடத்தை தோனி (27 வெற்றி, 60 போட்டி) வகிக்கிறார்.

3

இந்திய டெஸ்ட் அணியை முதல் முறையாக 2014ல் அடிலெய்டு டெஸ்டில் (எதிர்– ஆஸி.,) கோஹ்லி வழிநடத்தினார். தற்போது வரை 38 டெஸ்டில் கேப்டனாக இருந்துள்ளார். இப்போட்டியில் அசத்தியதன் மூலம், அணியை 38 போட்டியில் வழிநடத்தியபின், அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில் 3வது இடத்தை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனுடன் (தலா 22) பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (30), ஸ்டீவ் வாக் (27) உள்ளனர்.

கபிலுக்குப்பின்...

இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் கோஹ்லி. ஏற்கனவே, கபில் தேவ் இந்த பெருமையை பெற்றிருந்தார்.

4

டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் வரிசையில் கோஹ்லி 4வது இடத்தை கபில், சேவக்குடன் (தலா 8 முறை) பகிர்ந்து கொண்டார். முதல் மூன்று இடங்களில் முறையே சச்சின் (14), டிராவிட் (11), கும்ளே (10) உள்ளனர்.

6

இப்போட்டியில் ஜொலித்த கோஹ்லி கேப்டனாக 6வது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்றார். டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற 2வது ஆசிய கேப்டன் என்ற பெருமை பெற்றார். முதலிடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இம்ரான் கான் (10) உள்ளார். இலங்கையின் ஜெயவர்தனே (5) மூன்றாவது இடம் வகிக்கிறார்.

முதல் வெற்றி 

இம்முறைதான், கோஹ்லி முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் அணியை வழிநடத்தினார். நேற்று, இந்த மண்ணில் முதல் வெற்றியை பெற்றுத்தந்தார். 

440

இத்தொடரில் கோஹ்லி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். மூன்று போட்டியிலும் சேர்த்து இரண்டு சதம், இரண்டு அரை சதம் உட்பட மொத்தம் 440 ரன் குவித்து, இத்தொடரில் அதிக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். 

சச்சினை முந்துவாரா

இந்திய வீரர் கோஹ்லி இதுவரை 118 இன்னிங்சில் 5994 ரன் குவித்துள்ளார். இன்னும் 6 ரன் எடுத்தால், குறைந்த இன்னிங்சில் (119) 6 ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை (120) முந்தலாம்

5

இத்தொடரில் முதலிரண்டு போட்டியில் வீழ்ந்த இந்திய அணி அடுத்த டெஸ்டில் வென்றுள்ளது. இதனையடுத்து, டெஸ்ட் தொடரில் முதலிரண்டு வீழ்ச்சிக்குப்பின், அடுத்த போட்டியில் 5வது முறையாக எழுச்சி பெற்றுள்ளது. ஏற்கனவே, வெஸ்ட் இண்டீஸ் (1974–75), ஆஸ்திரேலியா (1977–78, 2008) தென் ஆப்ரிக்கா (2018) அணிகளுக்கு எதிராக இப்படி செயல்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Advertisement

பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் , போட்டி 6
Asia Cup, 2018
9/20/2018 , 17:00
ஷேக் ஜாயேத் ஸ்டேடியம், அபு தாபி

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?