Advertisement


முரளிவிஜய் சோகம்

ஆகஸ்ட் 12, 2018.
 Comments  
 


murali vijay, india, test
 

முதல் இன்னிங்சில் ஆண்டர்சன் ‘வேகத்தில்’ சிக்கிய முரளிவிஜய், நேற்று மீண்டும் இவரிடமே விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து, டெஸ்ட் அரங்கில் இவரை அதிக முறை (7) அவுட்டாக்கிய பவுலரானார் ஆண்டர்சன். இப்பட்டியலில், இரண்டாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் (6) உள்ளார்.

100

நேற்று முரளி விஜயை வெளியேற்றிய இங்கிலாந்தின் ஆண்டர்சன், லார்ட்ஸ் டெஸ்டில் தனது 100வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், ஒரே மைதானத்தில் அதிக டெஸ்ட் விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் 4வது இடத்தை எட்டினார். முதல் மூன்று இடங்களிலும் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முரளிதரனே (166 விக்., கொழும்பு, 117–கண்டி, 111–காலே) உள்ளார்.

 

கோஹ்லி காயம்

இந்திய கேப்டன் கோஹ்லிக்கு சிறிய அளவிலான முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, நேற்று ‘பீல்டிங்’ செய்யவில்லை. இவருக்குப்பதில் மாற்று வீரராக ஜடேஜா களமிறங்கினார். இந்திய அணியை களத்தில் ரகானே வழிநடத்தினார். ‘பீல்டிங்’கில் ஈடுபடவில்லை என்பதால், இந்திய அணியின் 2வது இன்னிங்ஸ் துவங்கிய 37 நிமிடத்திற்குள் இவரால் களமிறங்க முடியவில்லை. இந்த நேரத்திற்குள் முதலிரண்டு விக்கெட் வீழ்ந்ததால், கோஹ்லிக்குப்பதில் 4வது இடத்தில் ரகானே களமிறங்கினார்.

5

இந்திய அணி இரு இன்னிங்சையும் சேர்த்து (35.2+47) மொத்தமே 494 பந்துகளை மட்டுமே எதிர் கொண்டது. இதனையடுத்து, டெஸ்ட் அரங்கில் இந்திய அணி இரு இன்னிங்சிலும் குறைந்த பந்துகளை எதிர் கொண்ட போட்டிகள் வரிசையில் லார்ட்ஸ் டெஸ்ட், 5வது இடம் பிடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் (349 பந்து, 1952) முதலிடம் வகிக்கிறது.

முதல் முறை

இந்திய டெஸ்ட் அணிக்கு கடந்த 2014ல் கோஹ்லி கேப்டன் பொறுப்பை ஏற்றார். தற்போது வரை, 37 போட்டியில் அணியை வழிநடத்தி உள்ளார். இவரது தலைமையில் நேற்றுதான் இந்திய அணி முதல் முறையாக இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

அஷ்வின் சாதனை

லார்ட்ஸ் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் (29+33) அஷ்வின்தான், இந்திய அணி சார்பில் அதிக ரன் எடுத்தவர். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் 8 அல்லது அதற்கும் பின்வரிசையில் களமிறங்கி இந்த சாதனையை எட்டிய முதல் இந்திய வீரரானார். 

நான்கு ஆண்டுக்குப்பின்...

டெஸ்ட் அரங்கில் இந்திய அணி 4 ஆண்டுக்குப்பின் முதல் முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக, 2014 ஆகஸ்டில் இதே இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் இந்த சோகத்தை (இன்னிங்ஸ் மற்றும் 244 ரன் வித்தியாசம்) எதிர் கொண்டிருந்தது. 

பாவம் ரஷித்

இப்போட்டியில் இரு இன்னிங்சிலும் விளையாடிய இங்கிலாந்து ‘சுழல்’ வீரர் ரஷித் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. பவுலிங்கும் செய்யாத இவர், ‘கேட்ச்’ பிடிக்கவும் இல்லை. டெஸ்ட் அரங்கில், வெற்றி பெற்ற அணியில் இப்படி எந்தவொரு செயல்பாட்டிலும் ஈடுபடாத 13வது வீரரானார் ரஷித்.

5வது தோல்வி

கடந்த 2014ல் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியை ‘டிரா’ செய்த இந்தியா 2வது போட்டியில் (லார்ட்ஸ்) வென்றது. பின், அடுத்த 3 போட்டியிலும் வீழ்ந்து தொடரை இழந்தது. தற்போதைய தொடரின் இரண்டு போட்டியிலும் வீழ்ந்ததன் மூலம், இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து 5வது டெஸ்ட் தோல்வியை பெற்றது. 

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?