Advertisement


மதுரை அணி ‘முதல்’ சாம்பியன்: டி.என்.பி.எல்., தொடரில் அசத்தல்

ஆகஸ்ட் 12, 2018.
 Comments  
 


madurai team, tnpl, win
 
 சென்னை: டி.என்.பி.எல்., தொடரில் மதுரை அணி முதன்முறையாக கோப்பை வென்று சாதித்தது. பைனலில் அருண் கார்த்திக் அரைசதம் கடந்து கைகொடுக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி 2வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. நேற்று, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பைனலில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மதுரை அணி கேப்டன் ரோகித், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

விக்கெட் சரிவு

முதலில் ‘பேட்’ செய்த திண்டுக்கல் அணிக்கு அபிஷேக் தன்வர், லோகேஷ் ராஜ் தொல்லை தந்தனர். அபிஷேக் ‘வேகத்தில்’ ஹரி நிஷாந்த் (1), சதுர்வேத் (9), மோகன் அபினவ் (1) வெளியேறினர். லோகேஷ் பந்தில் அனிருத் (4), வருண் (0), விவேக் (13) அவுட்டாகினர். திண்டுக்கல் அணி 7.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 42 ரன் மட்டும் எடுத்து திணறியது.

ஜெகதீசன் ஆறுதல்

பின் இணைந்த கேப்டன் ஜெகதீசன் நாராயண், ராமலிங்கம் ரோகித் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது.ஏழாவது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது ரோகித் (14) ‘ரன்–அவுட்’ ஆனார்.கவுசிக் பந்தில் 2 ரன் எடுத்த ஜெகதீசன், இந்த சீசனில் 4வது அரைசதமடித்தார். வருண் ‘சுழலில்’ ஜெகதீசன் (51), சிலம்பரசன் (2) போல்டாகினர். அபிஷேக் வீசிய 20வது ஓவரின் 3, 4வது பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய முகமது (17), 5வது பந்தில் அவுட்டானார்.

திண்டுக்கல் அணி 19.5 ஓவரில் 117 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. திரிலோக் (1) அவுட்டாகாமல் இருந்தார். மதுரை அணி சார்பில் அபிஷேக் தன்வர் 4, லோகேஷ் ராஜ் 3 விக்கெட் கைப்பற்றினர்.

அருண் அபாரம்

சுலப இலக்கை விரட்டிய மதுரை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சிலம்பரசன் வீசிய முதல் ஓவரில் தலைவன் சற்குணம், துஷார், கேப்டன் ரோகித் ‘டக்–அவுட்’ ஆகினர். பின் இணைந்த அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டு ரன் சேர்த்தது. திரிலோக், வருண் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய அருண் கார்த்திக், இந்த சீசனில் 6வது முறையாக அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஷிஜித், ஹரி நிஷாந்த் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். வருண் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அருண் வெற்றியை உறுதி செய்தார். மதுரை அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அருண் கார்த்திக் (75), ஷிஜித் (38) அவுட்டாகாமல் இருந்தனர். திண்டுக்கல் அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

முதல் வெற்றி

பைனலில் வெற்றி பெற்றதன்மூலம், டி.என்.பி.எல்., வரலாற்றில் திண்டுக்கல் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது மதுரை. இதுவரை இவ்விரு அணிகள் 5 முறை மோதின. இதில் திண்டுக்கல் 4 (2016, 2017ல் லீக் சுற்று, 2018ல் லீக் மற்றும் தகுதிச் சுற்று–1), மதுரை ஒரு முறை (2018ல் பைனல்) வெற்றி பெற்றன.

ரூ. ஒரு கோடி பரிசு

டி.என்.பி.எல்., பைனலில் வென்ற மதுரை அணிக்கு கோப்பையுடன் ரூ. ஒரு கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு ரூ. 60 லட்சம் கிடைத்தது.

மூன்றாவது அணி

கடந்த இரு தொடர்களில் ஒரு வெற்றி கூட பெறாத மதுரை அணி இம்முறை அசத்தியது. டி.என்.பி.எல்., அரங்கில் கோப்பை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமை பெற்றது. ஏற்கனவே துாத்துக்குடி (2016, எதிர்: சேப்பாக்கம்), சேப்பாக்கம் (2017, எதிர்: துாத்துக்குடி) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

அருண் அசத்தல்

இத்தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் மதுரை அணியின் அருண் கார்த்திக் முதலிடம் பிடித்தார். இவர், 10 போட்டியில் 6 அரைசதம் உட்பட 472 ரன்கள் குவித்தார். அடுத்த 2 இடங்களில் முறையே திண்டுக்கலின் ஜெகதீசன் (396 ரன், 9 போட்டி), காரைக்குடியின் அனிருதா ஸ்ரீகாந்த் (347 ரன், 8 போட்டி) உள்ளனர்.

9769 ரன்...

டி.என்.பி.எல்., 3வது சீசனில் மொத்தம் 32 போட்டிகள் நடந்தன.

* மொத்தம் 9769 ரன்கள் எடுக்கப்பட்டன. இதில் 766 பவுண்டரி, 411 சிக்சர் அடங்கும்.

* இம்முறை 40 அரைசதம், ஒரு சதம் பதிவானது. மதுரை அணியின் அருண் கார்த்திக் அதிகபட்சமாக 6 அரைசதமடித்தார். துாத்துக்குடி அணியின் கவுசிக் காந்தி சதமடித்தார்.

* மொத்தம் 7400 பந்துகள் வீசப்பட்டன. இதில் 2728 ‘டாட் பால்’ அடங்கும். மதுரை அணியின் வருண் சக்கரவர்த்தி, அதிகபட்சமாக 125 ‘டாட் பால்’ வீசினார்.

* மொத்தம் 401 விக்கெட் கைப்பற்றப்பட்டன.

* ஆறு ஓவர்கள் மட்டுமே ‘மெய்டனாக’ வீசப்பட்டன. தவிர, 407 உதிரி ரன்கள் வழங்கப்பட்டன.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?