Advertisement


இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி: லார்ட்ஸ் டெஸ்டில் ஏமாற்றம்

ஆகஸ்ட் 12, 2018.
 Comments  
 


india cricket team, england, test
 

லண்டன்: அன்னிய மண்ணில் இந்திய அணியின் சோகம் தொடர்கிறது. லார்ட்ஸ் டெஸ்டில் வழக்கம் போல ‘பேட்டிங்’ சரிய, இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமாக தோற்றது. இங்கிலாந்து தரப்பில் ‘வேகத்தில்’ மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நடந்தது.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்கள் எடுத்தது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. வோக்ஸ் (120), கர்ரன் (22) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. கர்ரன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 396 ரன்கள் எடுத்து, ‘டிக்ளேர்’ செய்தது. வோக்ஸ் (137) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி, பாண்ட்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

விஜய் சொதப்பல்

இதனையடுத்து, 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்சை துவக்கியது. இங்கிலாந்து பவுலர்கள் மீண்டும் ‘அடி’ கொடுத்தனர். முதல் இன்னிங்சில் அச்சுறுத்திய ஆண்டர்சன் இம்முறையும் ‘வேகத்தில்’ மிரட்டினார். இவரது 2வது ஓவரின் 2வது பந்தில் சிக்கிய முரளி விஜய், இப்போட்டியில் இரண்டாவது முறையாக டக் அவுட்டானார். 

தொடர்ந்து குடைச்சல் தந்த ஆண்டர்சன் இம்முறை லோகேஷ் ராகுலை 10 ரன்களில் திருப்பி அனுப்பினார். மழை குறுக்கிட முன்னதாகவே உணவு இடைவேளைக்கு வீரர்கள் சென்றனர்.

வில்லன் பிராட்

ஒன்றரை மணி நேரத்திற்குப்பின் துவங்கிய ஆட்டத்தில், புஜாரா, ரகானே இணைந்தனர். ரகானே 13 ரன் எடுத்து திருப்தி அடைந்தார். ஒன்றிரண்டு ரன்களாக புஜாரா சேர்த்ததால் நம்பிக்கை பிறந்தது. இதற்கு வேட்டு வைத்தார் பிராட். இவரது பந்தில் புஜாரா (17) போல்டானார்.  கரை சேர்க்க வழக்கம்போல, கேப்டன் கோஹ்லி மட்டுமே இருந்தார். இந்த நேரத்தில், 31வது ஓவரை வீசிய பிராட் வில்லனாக வந்தார். 

கைவிட்ட கோஹ்லி

இதன் 3வது பந்தில் கோஹ்லி அடித்த பந்தை போப் பிடிக்க, அம்பயர் அலீம் தார் (பாக்.,) ‘அவுட்’ தந்தார். கோஹ்லி துணிந்து ‘ரிவியூ’ கேட்க, ‘ரீப்ளேயில்’ பந்து கிளவுசை உரசி சென்றது தெரியவர, கோஹ்லி (17) உடன் இணைந்து இந்திய ரசிகர்களும் நொந்து போகினர்.

அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். ஐந்தாவது பந்தை அஷ்வின் தடுத்தாட, பிராட் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பை கோட்டைவிட்டார். ஹர்திக் பாண்ட்யா (26) நிலைக்கவில்லை. அஷ்வின்(33) ஆறுதல் தந்தார்.  இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 130 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. தொடரில் 0–2 என பின்தங்கியது. ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் வோக்ஸ் கைப்பற்றினார். 

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ
தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்கா, 201 T20 மட்டுமே T20 சர்வதேச
8/14/2018 , 19:00
ஆர். பிரேமதாஸா ஸ்டேடியம், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?