Advertisement


மின்னும் மணிகா

ஆகஸ்ட் 12, 2018.
 Comments  
 


manika batra, india, table tennis
 

‘‘இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டை மணிகாதான் பிரபலமாக்கி உள்ளார். இவரைப்போன்ற வீராங்கனைகள் இன்னும் உருவாக வேண்டும்,’’ என, சரத் கமல் தெரிவித்தார்.

இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் மணிகா பத்ரா, 23. சமீபத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் ஜொலித்த இவர், காமன்வெல்த் அரங்கில் தனிநபரில் தங்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஆனார். அணிகள் பிரிவில் தங்கம், பெண்கள் இரட்டையரில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் வெண்கலம் என பதக்க வேட்டை நடத்தினார். 

இது குறித்து இந்திய ‘சீனியர்’ டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், 36, கூறியது: இந்தியாவில் டேபிள் டென்னிசை பிரபலமாக்க ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ வேண்டும் என நினைத்தேன். இதை என்னால் எட்ட முடியும் என எண்ணினேன். ஆனால், மணிகா வந்தபின் என்னையும் முந்திவிட்டார். இவர்தான், இந்திய மண்ணில் டேபிள் டென்னிஸ் மீதான பார்வையை மாற்றி உள்ளார்.

மக்கள் ஆதரவு

கடந்த 2006ல் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றபோது, மணிகா அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. தற்போது இருப்பதுபோல, சமூகவலைதளத்தின் தாக்கம் இல்லை. பத்திரிகையில் வெளிவரும் செய்திதான் மக்களுக்கு தெரியும். சமீபகாலமாக, சாப்பிடுவதற்கு ஓட்டலுக்கு சென்றால் கூட, நீங்கள் சரத் கமல்தானே, என அடையாளம் கண்டு கொள்கின்றனர். டேபிள் டென்னிஸ் விளையாட்டிற்கு மக்கள் ஆதரவு தர துவங்கிவிட்டனர். எனவே, மணிகா போன்ற நட்சத்திரங்கள்தான் இந்தியாவுக்கு தேவை. 

காமன்வெல்த்தில் சாதிக்கும் எங்களுக்கு ஆசிய விளையாட்டு எளிதானதாக அமைவது இல்லை. இதற்கு, சீன நட்சத்திரங்கள் முக்கிய காரணம். இதற்காக, சாதிக்க முடியாது என கூறவில்லை. நம்பிக்கையுடன் விளையாடி, தங்கம் வென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு சரத் கமல் கூறினார்.

 

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?