Advertisement


‘கனவை காப்பாற்றுங்கள்’

ஆகஸ்ட் 12, 2018.
 Comments  
 


Sanjita Chanu, india
 

‘‘ஊக்கமருந்து விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு எனக்கு நீதி வழங்க வேண்டும்,’’ என சஞ்சிதா சானு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு, 24. கடந்த 2014 கிளாஸ்கோ, இந்த ஆண்டு கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன் எடுக்கப்பட்ட இவரது சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்ததாக கூறப்பட, கடந்த மே மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பிறகு சஞ்சிதா விஷயத்தில் தவறு நடந்து விட்டதாக சர்வதேச பளுதுாக்குதல் அமைப்பு கூறியது. ஆனால் இந்திய பளுதுாக்குதல் அமைப்பு இவருக்கு ஆதரவு தர மறுக்க, ஆசிய விளையாட்டில் களமிறங்க முடியாமல் தவிக்கிறார். இதனால் ஊக்கமருந்து விவகாரத்தில் தனக்கு உதவுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதில் கூறியிருப்பது: மணிப்பூரின் பின் தங்கிய கிராமத்தின், வறுமையான குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். பல்வேறு கடினமான பாதைகளை கடந்து இந்த இடத்தை அடைந்தேன்.  சர்வதேச அரங்கில் இந்தியாவின் மூவர்ணக் கொடி பறக்கவேண்டும் என்ற கனவு நிறைவேற என் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களையும் தியாகம் செய்தேன். ஆனால் எனது 12 ஆண்டு கால உழைப்பு, கனவு அத்தனையும் ஊக்கமருந்து சர்ச்சை காரணமாக வீணாகி விட்டது. எனது வாழ்க்கையில் ஒருபோதும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியது இல்லை. நீங்கள் தான் எனது கடைசி நம்பிக்கை.  இவ்விஷயத்தில் தலையிட்டு உண்மை நிலையை கண்டறிந்து எனக்கு நீதி வழங்க வேண்டும். எனது சிறுநீர் மாதிரியுடன் ‘டி.என்.ஏ.,’ சோதனை செய்தால் நான் அப்பாவி என்ற உண்மை தெரியவரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இதை, விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், கிரிக்கெட் வீரர் காம்பிர், மேரி கோம் உள்ளிட்டோருக்கும் அனுப்பியுள்ளார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?