Advertisement


விளையாட்டாக ‘சுட்டது’

ஆகஸ்ட் 12, 2018.
 Comments  
 


Heena Sidhu, india
 

‘‘சிறுவயதில் விளையாட்டாக துப்பாக்கிசுடுதலில் ஈடுபட்டேன். தற்போது இதுவே வேலையாகிப் போனது. வரும் ஆசிய விளையாட்டு முக்கிய மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன்,’’ என ஹீனா சித்து தெரிவித்தார்.

இந்திய துப்பாக்கிசுடுதல் வீராங்கனை ஹீனா சித்து, 28. முன்னாள் ‘நம்பர்–1’ நட்சத்திரம். கடந்த 11 ஆண்டுகளாக இப்போட்டியில் நீடித்து வருகிறார். இவர் வரும் வாரம் ஜகார்த்தாவில் துவங்க உள்ள ஆசிய விளையாட்டில் சாதிக்க காத்திருக்கிறார். இதுகுறித்து ஹீனா சித்து கூறியது:

இந்திய துப்பாக்கிசுடுதல் நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த தொடர்களைப் போல இதிலும் இந்தியாவுக்கு பெருமை தேடித்தருவது மட்டும் தான் எங்களது இலக்கு. நீங்கள் எந்த போட்டியில் களமிறங்கினாலும் சரி, பயிற்சியில் எப்படி செயல்பட்டோம் என்பதை சற்று நினைத்து திறமையாக விளையாடினால் போதும், மற்றவை எல்லாம் தானாக நடக்கும்.

தற்போது துப்பாக்கிசுடுதல் போட்டியில் அஞ்சலி, சுமா நிறைய இளம் வீராங்கனைகள் வந்துள்ளனர். இதனால் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் துப்பாக்கிசுடுதல் எனது ரத்தத்தில் கலந்துள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள் இதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனக்கு சிறு வயதில் இருந்தே பிடிக்கும். சும்மா விளையாட்டாக துவங்கியது தற்போது இதுவே தொழிலாக போய்விட்டது. காமன்வெல்த், ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளேன். அடுத்து ஆசிய விளையாட்டு எனது வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு ஹீனா சித்து கூறினார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?