Advertisement


முதல் கோப்பை யாருக்கு: இன்று டி.என்.பி.எல்., பைனல்

ஆகஸ்ட் 11, 2018.
 Comments  
 


tnpl cup, cricket
 

சென்னை: டி.என்.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள பைனலில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி முதன்முறையாக கோப்பை வென்று சாதிக்கலாம்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள பைனலில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதுகின்றன.

ஜெகதீசன் நம்பிக்கை

இம்முறை லீக் சுற்றில் 7 போட்டியில் 5 வெற்றி, 2 தோல்வி என, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த திண்டுக்கல் அணி, 2வது முறையாக ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது. இதற்கு முன், 2016ல் அரையிறுதி வரை சென்றிருந்தது. மதுரைக்கு எதிரான தகுதிச் சுற்று–1ல் அசத்திய திண்டுக்கல் அணி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறியது.

‘பேட்டிங்கில்’ கேப்டன் ஜெகதீசன் (345 ரன்), விவேக் (249), ஹரி நிஷாந்த் (249) நம்பிக்கை அளிக்கின்றனர். மதுரைக்கு எதிரான தகுதிச் சுற்று–1ல் அரைசதம் கடந்த விவேக், நிஷாந்த் மீண்டும் கைகொடுக்கலாம். மற்ற வீரர்களும் ஒத்துழைப்பு தந்தால் நல்ல ஸ்கோரை பெறலாம். ‘பவுலிங்கில்’ முகமது (8 விக்கெட்), மோகன் அபினவ் (8) அசத்தி வருகின்றனர். இவர்களுக்கு சிலம்பரசன் (5), திரிலோக் (5), ஆதித்யா அருண் (4) கைகொடுத்தால் சுலப வெற்றி பெறலாம்.

அருண் அபாரம்

கடந்த இரண்டு சீசனில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத மதுரை அணி, இம்முறை முதல் போட்டியில் திண்டுக்கல் அணியிடம் வீழ்ந்தது. பின் எழுச்சி கண்ட மதுரை அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி கண்டு, முதன்முறையாக ‘பிளே–ஆப்’ வாய்ப்பை பெற்றது. இதில் தகுதிச் சுற்று–1ல் திண்டுக்கல் அணியிடம் வீழ்ந்த மதுரை அணி, தகுதிச்சுற்று–2ல் கோவை அணியை வென்று, பைனலுக்குள் நுழைந்தது. இம்முறை ‘பேட்டிங்கில்’ அருண் கார்த்திக் (397 ரன்) அசத்தி வருகிறார். இவரது ‘பார்ம்’ தொடர்ந்தால் இமாலய ஸ்கோரை பெறலாம். இவருக்கு தலைவன் சற்குணம் (191 ரன்), ஷிஜித் சந்திரன் (175), கவுசிக் (167) ஒத்துழைப்பு தந்தால் கூடுதல் பலம். பவுலிங்கில் அபிஷேக் தன்வர் (11 விக்கெட்) மிரட்டுகிறார். இவருடன் இணைந்து கவுசிக் (9), ராஹில் ஷா (8), வருண் (7) ஆகியோரும் அசத்தினால் கோப்பை வெல்லலாம்.

4

டி.என்.பி.எல்., வரலாற்றில் திண்டுக்கல், மதுரை அணிகள் இதுவரை 4 முறை மோதியுள்ளன. இதில் அனைத்திலும் திண்டுக்கல் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2016, 2017ல் லீக் சுற்றில் மதுரை அணிக்கு எதிராக வெற்றி கண்ட திண்டுக்கல் அணி, இம்முறை லீக் மற்றும் தகுதிச் சுற்று–1ல் வெற்றி பெற்றது.

 

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?