Advertisement


கால்பந்து அணிக்கு வரவேற்பு

ஆகஸ்ட் 10, 2018.
 Comments  
 


india, soccer team
 

புதுடில்லி: அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாறு படைத்த இளம் இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. டில்லி விமான நிலையத்தில் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

‘பிபா’ 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் 2019ல் ஸ்பெயினில் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் பங்கேற்க தயாராகும் வகையில் இந்திய அணி ஸ்பெயினில் நடந்த கோடிப் கோப்பை தொடரில் பங்கேற்றது. மர்சியா (0–2), மர்டானியா (0–3) அணிகளுக்கு எதிராக தோற்ற இந்திய அணி, வெனிசுலாவுடன்(0–0) ‘டிரா’ செய்தது. 20 வயது உலக கோப்பை தொடரில் 6 முறை உலக கோப்பை வென்ற அர்ஜென்டினாவை அடுத்து சந்தித்தது இந்தியா. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது நமது கால்பந்து அரங்கில் எழுச்சியை ஏற்படுத்தியது.

நேற்று இளம் இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பினர். இவர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பயிற்சியாளர் பிளாய்டு பிண்டோ கூறியது: உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய வெனிசுலா அணியுடன் கோடிப் தொடரில் ‘டிரா’ செய்ததையும் மறக்கக் கூடாது. இதே வேகத்துடன் அர்ஜென்டினா அணியை சந்தித்தோம். இதில் இந்திய இளம் வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டனர். சரியான நேரத்தில் கோல்கள் அடித்தனர். அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படத்தக்க வெற்றி. உலகத்தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இந்திய அணி மோத வேண்டும்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ
தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்கா, 201 T20 மட்டுமே T20 சர்வதேச
8/14/2018 , 19:00
ஆர். பிரேமதாஸா ஸ்டேடியம், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?