Advertisement


பெண்கள் கால்பந்து: இந்திய அணி கோல் மழை

ஆகஸ்ட் 09, 2018.
 Comments [2]  
 


india, soccer team, goal
 

திம்பு: தெற்காசிய நாடுகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் (15 வயது) லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய பெண்கள் அணி 12–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பூடானில் தெற்காசிய நாடுகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் (15 வயது பெண்கள்) தொடர் நடக்கிறது. இதன் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பூடான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. இதில் இந்திய வீராங்கனைகள் துவக்கத்தில் இருந்தே கோல் மழை பொழிந்தனர்.

போட்டியின் முதல் நிமிடத்தில் சில்கி தேவி கோல் அடித்தார். லிண்டா கோம் (6வது), அவிகா (13வது) தங்கள் பங்கிற்கு அசத்த, தேவி 20வது நிமிடம் இரண்டாவது கோல் அடித்தார். 42வது நிமிடம் சுனிதா அசத்த, 44வது நிமிடம் மீண்டும் ஜொலித்த தேவி ‘ஹாட்ரிக்’ கோல் பதிவு செய்தார். இந்தியா முதல் பாதியில் 6–0 என முந்தியது.

மீண்டும் கலக்கல்

இரண்டாவது பாதியிலும் இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து மிரட்டினர். 47வது நிமிடத்தில் கிரிட்டினா ஒரு கோல் அடித்தார். 58வது நிமிடம் அசத்திய அவிகா, இரண்டாவது கோல் பதிவு செய்தார். மாற்று வீராங்கனையாக களமிறங்கிய கிரண் (72) தன் பங்கிற்கு கலக்க, சுனிதா (79வது) இரண்டாவது கோல் அடித்து உதவினார். போட்டியின் 87 மற்றும் 90வது நிமிடத்தில் அஞ்சு, 2 கோல் அடிக்க இந்திய அணி எட்ட முடியாத துாரத்துக்கு சென்றது. இலங்கை தரப்பில் கடைசி வரை போராடியும் ஒரு கோல் கூட திருப்பி அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 12–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Lakshminarayanan 5 days ago | Report abuse
இந்தியா கால் பந்து விளையாட்டு மகளிர் அணிக்கு பாராட்டுக்கள். வெற்றியோடு நாடு திரும்புங்கள்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
VENKATESAN V 5 days ago | Report abuse
இந்திய வீராங்கனைகளுக்கு வீரவணக்கம். மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?