Advertisement


‘டுவென்டி–20’: சண்டிமால் தேர்வு

ஆகஸ்ட் 09, 2018.
 Comments  
 


chandimal, sri lanka
 

கொழும்பு: ஐ.சி.சி., விதித்த தடை முடிந்ததால் இலங்கை அணி கேப்டன் சண்டிமால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் ‘ரெகுலர்’ கேப்டன் தினேஷ் சண்டிமால், 28. இவர், கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார். இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இவரது தலைமையிலான இலங்கை அணி ‘பீல்டிங்’ செய்ய மறுத்தது. இதனையடுத்து கேப்டன் என்ற முறையில் இவருக்கு 3வது டெஸ்டில் விளையாட அபராதத்துடன் தடைவிதிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து விசாரித்த ஐ.சி.சி., ஒழுங்குநடவடிக்கை குழு, போட்டியின் விதிமுறையை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் சண்டிமாலுக்கு கூடுதலாக 2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதித்தது. இதனால் இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு தேர்வாகவில்லை.

இந்நிலையில் வரும் ஆக. 14ல் கொழும்புவில் நடக்கவுள்ள ஒரே ஒரு ‘டுவென்டி–20’ போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணியில் சண்டிமால் இடம் பிடித்துள்ளார். இவரது தடை, 4வது ஒருநாள் போட்டியுடன் முடிந்ததால் மீண்டும் சர்வதேச போட்டிக்கு தேர்வானார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?