Advertisement


ஆசிய விளையாட்டு: சிந்து நம்பிக்கை

ஆகஸ்ட் 08, 2018.
 Comments  
 


sindhu
 

ஐதராபாத்: ‘‘ஆசிய விளையாட்டிற்கு தயாராக குறைவான நாட்களே உள்ளன. இருப்பினும், சிறப்பாக செயல்படுவேன் என நம்புகிறேன்,’’ என, இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து தெரிவித்தார்.

இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் சிந்து, 23. ஒலிம்பிக்கில் (2016, ரியோ) வெள்ளி வென்ற இவர், சமீபத்திய உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி கைப்பற்றினார். இதற்கிடையே, வரும் 18ல் துவங்கவுள்ள ஆசிய விளையாட்டில் (ஜகார்த்தா) சாதிக்க தயாராகி வருகிறார்.

இது குறித்து சிந்து கூறுகையில்,‘‘ ஆசிய விளையாட்டில் தனிநபர் மற்றும் அணிகள் என இரண்டு பிரிவிலும் பங்கேற்க வேண்டும். இதற்கு பயிற்சி பெறும் நாட்களும் குறைவாகவே உள்ளன. கடந்த தொடரில் (2014, இன்ச்சான்) அணிகளுக்கான பிரிவில் வெண்கலம் வென்றோம். இம்முறை இதை விட சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன். தனிநபர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றது உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால், ஆசிய விளையாட்டில் பெண்கள் பிரிவில் முதல் முறையாக பதக்கம் வெல்ல முடியும் என எதிர்பார்க்கிறேன்,’’ என்றார்.

வெற்றி தொடரும்

இந்திய பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில்,‘‘ சீனாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பின் அட்டவணை சவால் தரும் வகையில் இருந்தது. முதல் போட்டியிலிருந்தே வெற்றிக்காக சிந்து போராடினார். இத்தொடரில் வெள்ளி வென்றது மகிழ்ச்சிதான். இதில், ஜப்பானின் நயோமி, அகானாவை வீழ்த்தினார். ஆசிய விளையாட்டிலும் சிந்துவால் ஜொலிக்க முடியும். இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. ஆசிய விளையாட்டிலும் வெற்றி நடை தொடரும் என நம்புகிறேன்,’’ என்றார்.

 

 

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?