Advertisement


ஹாக்கி: இந்தியா ‘நம்பர்–5’

ஆகஸ்ட் 07, 2018.
 Comments  
 


india hockey team
 

புதுடில்லி: சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி ‘நம்பர்–5’ இடத்தை பிடித்தது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் அணிகளுக்கான தரவரிசை வெ ளியிடப்பட்டது. கடந்த மாதம் நெதர்லாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேறியது. இதில் ஆஸ்திரேலிய அணியிடம் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ தோற்றது.

இருப்பினும் 1,484 புள்ளிகள் பெற்ற இந்திய அணி தரவரிசையில் (‘ரேங்க்’) ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (1,906) நீடிக்கிறது. அர்ஜென்டினா (1,883), பெல்ஜியம் (1,709), நெதர்லாந்து அணிகள் அடுத்த மூன்று இடங்களில்  உள்ளன.

2012 ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனி (6), இங்கிலாந்து (7) மற்றும் ஸ்பெயின் (8) அணிகள் இந்தியாவை விட பின்தங்கியுள்ளன.

பெண்கள் அணி எப்படி

பெண்கள் அணியை பொறுத்தவரையில் சமீபத்திய உலக கோப்பை தொடரின் காலிறுதியில் அயர்லாந்திடம் தோற்ற இந்தியா, ஒரு இடம் முன்னேறி 9வது இடம் பெற்றது. இது ஆசிய அணிகளில் சிறந்த இடமாக உள்ளது. மற்ற ஆசிய அணிகளான கொரியா (10), சீனா (11) மற்றும் ஜப்பான் (14) இந்தியாவை விட பின் தங்கியுள்ளன. 

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?