Advertisement


பைனலுக்கு செல்வது யார்: மதுரை–திண்டுக்கல் பலப்பரீட்சை

ஆகஸ்ட் 06, 2018.
 Comments  
 


TNPL T20 Cricket, Madurai, Dindigul, Qualifier
 

திருநெல்வேலி: டி.என்.பி.எல்., தொடரின் தகுதிச்சுற்று 1ல் இன்று மதுரை, திண்டுக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வென்று பைனலுக்கு செல்வது யார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எல்., தொடரின் மூன்றாவது சீசன் தமிழகத்தில் நடக்கிறது. லீக் சுற்று முடிவில் திண்டுக்கல் (10), மதுரை (10), கோவை (8) மற்றும் காரைக்குடி (8) அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. 2016 சாம்பியன் துாத்துக்குடி, திருச்சி அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றாலும் குறைவான ‘ரன் ரேட்’ காரணமாக வெளியேறின. நடப்பு சாம்பியன் சேப்பாக்கம், காஞ்சி அணிகள் தலா 1 வெற்றியுடன் திரும்பின. 

இந்நிலையில் இன்று திருநெல்வேலியில் நடக்கும் தகுதிச்சுற்று 1ல் திண்டுக்கல், சென்னை அணிகள் மோதுகின்றன. மதுரை அணியை பொறுத்தவரையில் கடந்த இரு தொடர்களில் ஒரு வெற்றி (13 தோல்வி, 1 போட்டி ரத்து) கூட பெறவில்லை. இத்தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்து தொடர்ந்து 5 வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு நுழைந்தது. 

கடைசி லீக் போட்டியில் தோற்றாலும் இன்று வெற்றி பெற்றால் பைனல் என்பதால் மதுரை போராடும் என நம்பலாம். இதற்கு அருண் கார்த்திக் (307 ரன்), தலைவன் சற்குணம் (178), கவுசிக் (160) உள்ளிட்டோர் பேட்டிங்கில் கைகொடுக்கலாம். பவுலிங்கை பொறுத்தவரையில் 8 விக்கெட் சாய்த்த ராகில் ஷா, தலா 7 விக்கெட் சாய்த்த வருண், கவுசிக், தன்வர் கூட்டணி திண்டுக்கல் அணிக்கு சிக்கல் தரலாம். 

திண்டுக்கல் அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் கேப்டன் ஜெகதீசன் (302 ரன்) பெரிதும் நம்பிக்கை தருகிறார். அடுத்து வரும் விவேக் (195), ஹரி நிஷாந்த் (192) என மூவரும் முதுகெலும்பாக உள்ளனர், பவுலிங்கில் அஷ்வின் இல்லாமல் தடுமாறினாலும் அபினவ் முகுந்த் (6) சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி ஆறுதல் தருகிறார். முகமது (5), சிலம்பரசன் (4) சற்று உதவுகின்றனர். 

லீக் சுற்றில் மதுரை அணியை வீழ்த்தியதால் திண்டுக்கல் உற்சாகத்தில் களமிறங்கும். எனினும் மதுரை இம்முறை எளிதில் விட்டுத்தராது என நம்பப்படுகிறது.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?