Advertisement


அர்ஜென்டினாவை அதிர வைத்த இந்தியா: கோடிப் கோப்பை கால்பந்தில் அசத்தல்

ஆகஸ்ட் 06, 2018.
 Comments [5]  
 


COTIF Cup Football, India U20, Argentina U20, Anwar Ali
 

மாட்ரிட்: கோடிப் கோப்பை தொடரில் (20 வயது) இளம் இந்திய அணி, 6 முறை ‘ஜூனியர்’ உலக கோப்பை வென்ற அர்ஜென்டினாவை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது. 

‘பிபா’ 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் 2019ல் ஸ்பெயினில் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் பங்கேற்க தயாராகும் வகையில் இந்திய அணி ஸ்பெயினில் நடக்கும் கோடிப் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. 

17 வயது உலக கோப்பை தொடரில் களமிறங்கிய 8 வீரர்கள் மற்றும் ஐ–லீக் தொடரில் இந்தியன் ஆரோஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் இளம் இந்திய அணியில் இடம் பெற்றனர். 

மர்சியா (0–2), மர்டானியா (0–3) அணிகளுக்கு எதிராக தோற்ற இந்திய அணி, வெனிசுலா அணிக்கு எதிராக (0–0) ‘டிரா’ செய்தது. நான்காவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. 2006 உலக கோப்பை தொடரில் விளையாடிய லியோனல் ஸ்கலோனி அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.

போட்டியின் 4வது நிமிடம் கிடைத்த ‘கார்ன் கிக்’ வாய்ப்பில் இந்திய வீரர் நின்தோயின்கன்பா அடித்த பந்தை தீபக் டாங்கிரி தலையால் முட்டி கோல் அடித்து அசத்த முதல் பாதியில் இந்திய அணி 1–0 என முந்தியது. இரண்டாவது பாதியில் 54வது நிமிடம் அனிகீத் ஜாதவுக்கு ‘‘ரெட்’ கார்டு காட்டப்பட, இந்திய அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இருப்பினும் மனம் தளராத இந்திய அணி வீரர்கள் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தினர். அர்ஜென்டினா அணியின் அடுத்தடுத்த தாக்குதலை கோல் கீப்பர் கில் தடுத்து கலக்கினார். போட்டியின் 68 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. 

இதில் அன்வர் அலி கோல் அடிக்க இந்தியா 2–0 என முன்னிலை பெற்றது. பின் அர்ஜென்டினா தரப்பில் ஆலன் ஒரு கோல் அடித்தார். மீண்டும் கோல் அடிக்க அர்ஜென்டினா அணி வீரர்கள் எடுத்த முயற்சிகளை இந்திய வீரர்கள் தடுத்தனர். முடிவில் இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, வரலாறு படைத்தது.

ஈராக்கிடம் வெற்றி

ஜோர்டனில் நடக்கும் மேற்கு ஆசிய கால்பந்து தொடரில் (16 வயது) இந்திய அணி, ஆசிய சாம்பியன் ஈராக்கை எதிர்கொண்டது. இதன் முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் போட்டி முடிய சில வினாடிகள் இருந்த நிலையில் சக வீரரிடம் இருந்து பந்தை பெற்ற புவனேஷ், தலையால் முட்டி கோல் அடிக்க, இந்தியா 1–0 என வெற்றி பெற்றது. கால்பந்து வரலாற்றில் ஈராக் அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இது. 

இந்திய அணி (20 வயது) பயிற்சியாளர் பிளாய்டு பின்டோ கூறுகையில்,‘‘ அர்ஜென்டினா அணிக்கு எதிராக பெற்ற வெற்றி உலக கால்பந்து அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது. உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக மோதுவதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது,’’ என்றார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
ganapathisb one week ago | Report abuse
அருமை இளம் இந்திய கால்பந்தாட்ட அணிக்கு பாராட்டுக்கள்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
viswanathan one week ago | Report abuse
மிகவும் பெருமிதமான பாராட்டத்தக்க நிகழ்வு


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
rams one week ago | Report abuse
வெற்றிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Srini one week ago | Report abuse
வாழ்த்துக்கள் வீரர்களே.....




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?