Advertisement


மீண்டும் வெள்ளி வென்றார் சிந்து: தொடரும் பைனல் ‘அலர்ஜி’

ஆகஸ்ட் 05, 2018.
 Comments [3]  
 


World Badminton Championships, Sindhu, Silver Medal, Carolina Marin, Gold Medal
 

நான்ஜிங்: பைனல் என்றாலே பதறுகிறார் சிந்து. உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலிலும் ஏமாற்றிய இவர், வெள்ளிப் பதக்கம் வென்று ஆறுதல் அடைந்தார்.

சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–3’ இந்தியாவின் சிந்து, 8வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டாார். முதல் செட்டை 19–21 என போராடி இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 10–21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 45 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 19–21, 10–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து மீண்டும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

நான்காவது பதக்கம்: கடந்த ஆண்டு நடந்த இத்தொடரின் பைனலில் சிந்து, ஜப்பானின் ஒகுகராவிடம் வீழ்ந்து வெள்ளி வென்றிருந்தார். தவிர இது, உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 4வது பதக்கம். இதற்கு முன், 2013, 2014ல் தலா ஒரு வெண்கலம், 2017ல் வெள்ளி கைப்பற்றினார்.

8வது பதக்கம்

உலக பாட்மின்டனில் இந்தியாவுக்கு இதுவரை 8வது பதக்கம் கிடைத்துள்ளது. இதில் 3 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கும். இதுவரை பிரகாஷ் படுகோனே (1983ல் வெண்கலம்), ஜுவாலா கட்டா–அஷ்வினி பொன்னப்பா (2011ல் வெண்கலம்), செய்னா (2015ல் வெள்ளி, 2017ல் வெண்கலம்), சிந்து (2013, 2014ல் தலா ஒரு வெண்கலம், 2017, 2018ல் தலா ஒரு வெள்ளி) ஆகியோர் இந்தியா சார்பில் உலக பாட்மின்டனில் பதக்கம் வென்றுள்ளனர்.

மரின் ‘3’

ஸ்பெயினின் கரோலினா மரின், மூன்றாவது முறையாக (2014, 2015, 2018) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 3 முறை தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

22 முறை

ஒட்டுமொத்தமாக சிந்து, ஒற்றையர் பிரிவு பைனலில் இதுவரை 22 முறை விளையாடி உள்ளார். இதில் 10ல் வெற்றி பெற்று கோப்பை வென்ற இவர், 12ல் தோல்வியை சந்தித்துள்ளார்.

தொடரும் சோகம்

கடந்த 2016 முதல் தற்போது முடிந்த உலக சாம்பியன்ஷிப் வரை சிந்து விளையாடிய 13 பைனலில் 8ல் தோல்வியை சந்தித்துள்ளார்.

5 வெள்ளி

இந்திய வீராங்கனை சிந்து, ஒலிம்பிக் (2016), உலக சாம்பியன்ஷிப் (2017, 2018), காமன்வெல்த் விளையாட்டு (2018), தெற்காசிய விளையாட்டு (2016) என, ஐந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

13 முறை

ஒட்டுமொத்த பாட்மின்டன் (ஜூனியர், சீனியர்) அரங்கில் சிந்து, கரோலினா மரின் 13 முறை மோதியுள்ளனர். இதில் சிந்து 6, கரோலினா 7ல் வெற்றி பெற்றனர்.

மீண்டு வருவேன்

சிந்து கூறுகையில்,‘‘ கடந்த ஆண்டும் உலக சாம்பியன்ஷிப் பைனலில் வீழ்ந்தேன். மீண்டும் பைனலில் தோல்வியடைந்தது சோகமாக உள்ளது. குறிப்பிட்ட நாட்கள் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாது. வாழ்வில் ஏற்றம், இறக்கம் இருக்கத் தான் செய்யும். இந்த தோல்வியிலிருந்து மீண்டு, அடுத்த தொடரில் சிறப்பாக செயல்படுவேன்,’’ என்றார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
TAMIL RAJ one week ago | Report abuse
congratlation sindu, better next time you have win gold all the best


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Karupatti one week ago | Report abuse
சிந்து முடிந்த வரை போராடி இந்த பதக்கமாவது வென்றிருக்கிறார். இன்னும் பயிற்சி எடுத்தால் நேரம் சரியாக இருந்தால் அடுத்த முறை நல்லது நடக்கும்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
hariharan r one week ago | Report abuse
சிந்து வெல்வார்...வாழ்த்துக்கள்.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?