Advertisement


உலக பாட்மின்டன்: பைனலில் சிந்து

ஆகஸ்ட் 04, 2018.
 Comments  
 


World Badminton Championships, Sindhu, Final
 

நான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை சிந்து மீண்டும் முன்னேறினார். அரையிறுதியில் 21–16, 24–22 என, ஜப்பானின் அகானே யமகுசியை தோற்கடித்தார்.

சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–3’ இந்தியாவின் சிந்து, 2வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுசியை எதிர்கொண்டார். முதல் செட்டை 21–16 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 24–22 என போராடி தன்வசப்படுத்தினார்.

மொத்தம் 55 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 21–16, 24–22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு நடந்த பைனலில் சிந்து, ஜப்பானின் ஒகுகராவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து இதுவரை 3 பதக்கம் (2013, 2014ல் வெண்கலம் மற்றும் 2017ல் வெள்ளி) வென்றுள்ளார். பைனலில் சிந்து அசத்தும் பட்சத்தில், உலக பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைக்கலாம். இதுவரை செய்னா நேவல் (2015), சிந்து (2017) தலா ஒரு வெள்ளி வென்றுள்ளனர்.

கரோலினாவுடன் மோதல்: பைனலில் (ஆக. 5) சிந்து, உலகின் ‘நம்பர்–8’ வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார். சர்வதேச பாட்மின்டன் அரங்கில் இவர்கள் இருவரும் 11 முறை மோதியுள்ளனர். இதில் சிந்து 5, கரோலினா மரின் 6ல் வென்றனர். கடைசியாக இந்த ஆண்டு நடந்த மலேசிய ஓபன் காலிறுதியில் இவர்கள் மோதினர். இதில் சிந்து 22–20, 21–19 என வென்றிருந்தார்.

 

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?