Advertisement


உலக பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து

ஆகஸ்ட் 03, 2018.
 Comments  
 


World baminton championships, india saina, sindhu
 

நான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார். காலிறுதியில் ஜப்பானின் ஒகுகராவை தோற்கடித்தார்.

சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுகரா மோதினர். மொத்தம் 58 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய சிந்து 21–17, 21–19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இவர் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். அரையிறுதியில் சிந்து, ஜப்பானின் அகானே யமகுசியை சந்திக்கிறார்.

செய்னா தோல்வி: மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல் 6–21, 11–21 என ஸ்பெயின் கரோலினா மரினிடம் வீழ்ந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரனீத் 12–21, 12–21 என, ஜப்பானின் கென்டோ மொமோடாவிடம் தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரான்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஜோடி, 17–21, 10–21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜெங், ஹுயாங் ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?