Advertisement


சாதிப்பரா சிந்து, செய்னா

ஜூலை 29, 2018.
 Comments  
 


sindhu
 

நான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இதில், இந்தியா சார்பில் செய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சாதிக்க காத்திருக்கின்றனர்.

சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு இத்தொடர் ராசியாக அமைந்துள்ளது. கடந்த 2013, 14ல் வெண்கலம் கைப்பற்றிய இவர், 2017ல் வெள்ளியை வசப்படுத்தினார். கடந்த ஆண்டு, சையது மோடி, இந்திய ஓபன், கொரிய ஓபன் என மூன்று தொடரில் பட்டம் வென்று சிறப்பான ‘பார்மில்’ உள்ளார். இது தவிர, உலக சாம்பியன்ஷிப், ஹாங்காங் ஓபன், சூப்பர் சீரிஸ் பைனல் வரை முன்னேறினார்.

இம்முறை முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்டுள்ள சிந்து மூன்றாவது சுற்றில் கொரியாவின் சங் ஜி ஹியுனை எதிர் கொள்ள வாய்ப்புள்ளது. இதில் வென்றால், காலிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ நயோமி ஒகுராவை (ஜப்பான்) சந்திக்கலாம்.

செய்னா எப்படி

செய்னாவை பொறுத்தவரை இத்தொடரில் இரண்டு முறை பதக்கம் (2015– வெள்ளி, 2017– வெண்கலம்) வென்றுள்ளார். சமீபத்திய, காமன்வெல்த் விளையாட்டில் தங்கத்தை தனதாக்கிய இவருக்கு, முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்படுள்ளது. அடுத்தடுத்த சுற்றில் தாய்லாந்தின் ரட்சானோக், ஸ்பெயினின் கரோலினா மரின் நெருக்கடி தரலாம்.

ஸ்ரீகாந்த் எதிர்பார்ப்பு

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4 கோப்பை வென்ற இவர், காமன்வெல்த்தில் வெள்ளி கைப்பற்றினார். ஜாம்பவான் லீ சாங் வெய் (மலேசியா, காயம்) இல்லாதது இவருக்கு சாதகம். பிரனாய், சமீர் வர்மா, சாய் பிரனீத்தும் நம்பிக்கை அளிக்கலாம். இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா– சிக்கி ரெட்டி ஜோடி(பெண்கள்), மானு அட்ரி, சுமித் ரெட்டி (ஆண்கள்) உள்ளிட்டோர் அசத்தலாம்.

புதிய வரலாறு

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இதுவரை 6 பதக்கம் கிடைத்துள்ளது. இதில், வீரர் என்ற அடிப்படையில் பிரகாஷ் படுகோனே (1983, கோபன்ஹகேன், வெண்கலம்) மட்டுமே சாதித்துள்ளார். மற்ற 5 பதக்கமும் சிந்து (3), செய்னா (2) வென்றுள்ளனர். இம்முறை, எந்த ஒரு நட்சத்திரம் ஜொலித்தாலும், முதல் முறை தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாறு படைக்கலாம். 

 

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?