Advertisement


சவுரப் வர்மா சாம்பியன்: ரஷ்ய பாட்மின்டனில் அசத்தல்

ஜூலை 29, 2018.
 Comments  
 


Sourabh Verma, Russia Open Tour Super 100 Badminton, Champion, Koki Watanabe, Japan
 

விலாடிவோஸ்டக்: ரஷ்ய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரப் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 18–21, 21–12, 21–17 என, ஜப்பானின் கோகி வாடானபேவை தோற்கடித்தார்.

ரஷ்யாவில் உள்ள விலாடிவோஸ்டக் நகரில், ரஷ்ய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சவுரப் வர்மா, ஜப்பானின் கோகி வாடானபே மோதினர். முதல் செட்டை 18–21 என இழந்த சவுரப் வர்மா, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21–12 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 21–17 என, வென்றார்.

ஒரு மணி நேரம் நீடித்த போட்டியின் முடிவில் சவுரப் வர்மா 18–21, 21–12, 21–17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது, இந்த சீசனில் இவரது முதல் பட்டம். தவிர ஒட்டுமொத்தமாக இவரது 2வது பட்டம். இதற்கு முன், 2016ல் சீனதைபே மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பை வென்றிருந்தார். மலேசிய மாஸ்டர்ஸ் (2014), பிட்பர்கர் ஓபன் (2016) தொடர்களில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோஹன் கபூர், குஹூ கார்க் ஜோடி 19–21, 17–21 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் விளாடிமிர் இவானோவ், தென் கொரியாவின் மின் குயுங் கிம் ஜோடியிடம் தோல்வியடைந்து 

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?