Advertisement


ஆசிய கோப்பை வேண்டாம்: சேவக் ஆவேசம்

ஜூலை 26, 2018.
 Comments  
 


Virendra Sehwag
 

புதுடில்லி: ‘‘ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அடுத்தடுத்த நாள் போட்டியில் பங்கேற்பதாக அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான குழப்பமான அட்டவணை காரணமாக இந்திய அணி விலகி விடலாம்,’’ என, இந்திய முன்னாள் வீரர் சேவக் தெரிவித்தார். 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஆசிய கோப்பை தொடர் (50 ஓவர்) நடத்தப்படுகிறது. இதன் 14வது தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 15– 28, 2018) நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கின்றன. ஒரு இடத்திற்கு தகுதிச்சுற்றில் வெல்லும் அணி முன்னேறும். இத்தொடருக்கான, அட்டவணையில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெல்லும் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்திய அணி முதல் போட்டியில் (செப். 18) தகுதிச்சுற்றில் வெல்லும் அணியை சந்திக்கிறது. அடுத்த நாள் (செப். 19) பாகிஸ்தானுடன் மோத உள்ளது. 

இது குறித்து சேவக் கூறுகையில்,‘‘ ஆசிய கோப்பை அட்டவணையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இன்றைய நிலையில், எந்த அணி அடுத்தடுத்து ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. ஆனால், இந்திய அணிக்கு இப்படித்தான் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நிலவும் வெப்பத்திற்கு இடையே இப்படி விளையாடுவது கடினம். 

அவகாசம் தேவை

ஒரு நாள் போட்டியில் ஒரு வீரர் 3.5 மணி நேரம் ‘பீல்டிங்’ மற்றும் 2 மணி நேரம் ‘பேட்டிங்’ செய்வது அவசியம். ஒட்டுமொத்தமாக, 5.5 மணி நேரம் களத்தில் இருக்க வேண்டும். அடுத்த ஒரு நாள் போட்டியை விளையாட குறைந்தது 48 மணி நேரம் அவகாசம் அவசியம். தவிர, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது, வீரர்கள் சோர்வாக இருப்பது நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஆசிய கோப்பை தொடரின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு மாற்ற வேண்டும். இல்லை எனில், இந்திய அணி இத்தொடரிலிருந்து விலகிவிடலாம்,’’ என்றார். 

 

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?