Advertisement


ராம்குமார் 2வது இடம்

ஜூலை 23, 2018.
 Comments  
 


Ramkumar Ramanathan, Hall Of Fame Open Tennis
 

நியூபோர்ட்: ‘ஹால் ஆப் பேம்’ டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் தோல்வியடைந்த இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், 2வது இடம் பிடித்தார்.

அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில் ‘ஹால் ஆப் பேம்’ ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன் மோதினர். முதல் செட்டை 5–7 என போராடி இழந்த ராம்குமார், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6–3 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய இவர், 2–6 என கோட்டைவிட்டார்.

முடிவில் ராம்குமார் 5–7, 6–3, 2–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பின், ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமை பெறத் தவறினார்.

தரவரிசையில் முன்னேற்றம்

இருப்பினும் ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசை பட்டியலில் 46 இடங்கள் முன்னேறிய ராம்குமார், முதன்முறையாக 115வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, ஒரு இடம் பின்தங்கி 86வது இடத்தில் உள்ளார். பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 186வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா 27வது இடத்தில் நீடிக்கிறார். திவிஜ் சரண் (38வது இடம்), பயஸ் (80வது), புரவ் ராஜா (83) பின்னடைவை சந்தித்தனர். ஜீவன் நெடுஞ்செழியன் (87வது இடம்), ஸ்ரீராம் பாலாஜி (96வது), விஷ்ணுவர்தன் (98) ஆகியோர் முன்னேற்றம் கண்டனர்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?