Advertisement


ஆசிய பாட்மின்டன்: லக்சயா தங்கம்

ஜூலை 22, 2018.
 Comments  
 


Asia Junior Badminton Championships, Lakshya Sen, Gold
 

ஜகார்த்தா: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் தங்கம் வென்றார். பைனலில் 21–19, 21–18 என்ற கணக்கில் தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சர்னை வீழ்த்தினார்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லக்சயா சென், தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சர்ன் மோதினர். முதல் செட்டை 21–19 எனக் கைப்பற்றிய லக்சயா, 2வது செட்டை 21–18 என வென்றார். மொத்தம் 46 நிமிடம் நீடித்த போட்டியில் லக்சயா சென் 21–19, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

53 ஆண்டுகளுக்கு பின்: இதன்மூலம் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் பிரிவில் 53 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார். இதற்கு முன், கடந்த 1965ல் இந்தியாவின் கவுதம் தக்கார் தங்கம் வென்றிருந்தார். இது, இத்தொடரில் லக்சயா சென் வென்ற 2வது பதக்கம். ஏற்கனவே இவர், கடந்த 2016ல் வெண்கலம் கைப்பற்றி இருந்தார்.

உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா சார்பில் கவுதம் தக்கார் (1965ல் தங்கம்), பிரனாவ் சோப்ரா – பிரஜ்தா சவந்த் (2009ல் வெண்கலம், கலப்பு இரட்டையர்), சமீர் வர்மா (2011ல் வெள்ளி, 2012ல் வெண்கலம்), சிந்து (2011ல் வெண்கலம், 2012ல் தங்கம்), லக்சயா சென் (2016ல் வெண்கலம், 2018ல் தங்கம்) ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.

ஊக்கம்: இதுகுறித்து லக்சயா கூறுகையில், ‘‘ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச்சி. இது, அடுத்து விளையாடவுள்ள போட்டிகளில் சாதிக்க ஊக்கமளிக்கும் என நம்புகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் முழுத்திறமையை வெளிப்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது,’’ என்றார்.

ரூ.10 லட்சம் பரிசு

ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற இந்திய வீரர் லக்சயாவுக்கு, இந்திய பாட்மின்டன் சங்கம் (பி.ஏ.ஐ.,) சார்பில் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இவர்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தவர் லக்சயா சென், 16. இவர், பிரகாஷ் படுகோனே பாட்மின்டன் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். இவரது தந்தை டி.கே. சென் பயிற்சியாளராக உள்ளார். இவரது சகோதரர் சிராக் சென், பாட்மின்டன் வீரர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான உலக ஜூனியர் பாட்மின்டன் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடம் பிடித்தார். இவர், இந்திய சர்வதேச சீரிஸ் (2016, 2017), பல்கேரியன் ஓபன் (2017) தொடர்களில் தங்கம் வென்றிருந்தார்.வெளிப்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது,’’ என்றார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?