Advertisement


பாட்மின்டன்: ருத்விகா தோல்வி

ஜூலை 19, 2018.
 Comments  
 


Ruthvika Gadde
 

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ருத்விகா, ரிதுபானா தோல்வியடைந்தனர்.

சிங்கப்பூரில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் ருத்விகா ஷிவானி, ஜப்பானின் சயாகாவை எதிர் கொண்டார் முதல் செட்டை 8–21 என இழந்த ருத்விகா, அடுத்த செட்டையும் 15–21 என கோட்டைவிட்டார். மொத்தம் 26 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், ருத்விகா 8–21, 15–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ரிதுபானா தாஸ் 21–15, 13–21, 16–21 என இந்தோனேசியாவின் யூலியாவிடம் வீழ்ந்தார்.

அஷ்வினி ஜோடி ஏமாற்றம்

கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ், அஷ்வினி பொன்னப்பா ஜோடி 14–21, 21–16, 14–21 என ஹாங்காங்கின் லீ சான், ஹோ வெய் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனவ் ஜெர்ரி, சிக்கி ரெட்டி ஜோடி 15–21, 11–21, என ஹாங்காங்கின் சாங், விங் யங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுபாங்கர் 13–21, 14–21 என சீன தைபேயின் சோய் டின்னிடம் வீழ்ந்தார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?